பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகும் பிரஜின் சீரியல் நடிகை - இவங்கள டிவில பாத்தே பல மாசம் ஆச்சே.

By Rajkumar · 30/8/2021

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தனர். தமிழில் ஒளிபரப்பாவது போல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த ஆண்டு கூட பிக் பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்ற செய்திகள் கூட வெளியானது. ஆனால், அதனை முற்றிலும் மறுத்தது எண்டிமால் நிறுவனம். இப்படி ஒரு நிலையில் அடுத்த சீசன் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தள்ளது.

இதையும் பாருங்க : 17 வயதில் மாடலிங்கிற்கு வந்த போது நடத்திய முதல் போட்டோ ஷூட்டை பகிர்ந்த சுருதி ஹாசன்.

ஆனால், அடுத்த சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக இருகிறது என்று உறுதியாகிவிட்டது. வரும் அக்டோபர் மாதம் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் ப்ரோமோ ஷூடிங் கூட நடைபெற்றது. அதே போல இந்த சீசனில் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்கள் குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகிறது.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் பிரஜனுக்கு ஜோடியாக நடித்த பவானி ரெட்டி கலந்துகொள்ள இருப்பதாக நம்பகரமான தகவல் வெளியாகி இருக்கிறது. இறுதியாக இவர் ராசாத்தி சீரியலில் நடித்து இருந்தார். அதன் பின்னர் இவரை எந்த சீரியலிலும் காண முடியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full