தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தனர். தமிழில் ஒளிபரப்பாவது போல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த ஆண்டு கூட பிக் பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்ற செய்திகள் கூட வெளியானது. ஆனால், அதனை முற்றிலும் மறுத்தது எண்டிமால் நிறுவனம். இப்படி ஒரு நிலையில் அடுத்த சீசன் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தள்ளது. ஆனால், அடுத்த சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக இருகிறது என்று கூறப்படுகிறது.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப விஜய் தொலைக்காட்சி என்டிமால் நிறுவனத்துடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளதாம். எனவே, இனி வரும் 6 சீசன் வரை பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாகும். ஒருவேளை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமலுக்கு பதிலாக வேறு யாரவது வரலாம். அதே போல பிக் பாஸின் ஐந்தாவது சீசன் வரும் ஜூன் மாதம் துவங்க இருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகளும் துவங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை எண்டிமால் என்ற நிறுவனம் தான் தயாரித்தது. சர்வதேச அளவில் பெரிய தொலைக்காட்சி தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் விளங்கும் நிறுவனம் என்டமோல் ஷைன் . கடந்த 2014ஆம் ஆண்டில் என்டமோல் மற்றும் ஷைன் இரண்டும் இணைந்து என்டமோல் ஷைன் என்று அழைக்கப்பட்டது.  இந்த நிறுவனம் கடந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 79 நாடுகளில் இந்த நிறுவனம் 800 தயாரிப்புகளை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement