என் பேரு சுரேஷ் ஆன ' கூலு'னு கூப்புடுறது இல்ல 'கூ'வ எடுத்துட்டு - எல்லை மீறி பேசிய கூல் சுரேஷ். வெடித்த இந்த சீஸனின் முதல் சர்ச்சை வீடியோ.

By Ajju · 2/10/2023

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நேற்று கோலாகலமாக நடைபெற்று இருந்தது கடந்த ஆறு சீசன் களை போலவே இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று முதல் நாளே 18 போட்டியாளர்களின் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தனர். அதில் முதல் ஆளாக கூல் சுரேஷ் சென்று இருந்தார். அவரை தொடர்ந்து பூர்ணிமா ரவி ரவீனா தாகா பிரதீப் ஆண்டனி நிக்சன் வினுஷா தேவி, மணி சந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், அயிஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், அனன்யா ராவ், யுகேந்திரன், சரவண விக்ரம், விசித்திரா, விஜய் வர்மா என்று பலர் கலந்துகொண்டனர்.

https://twitter.com/Raja42733145Ram/status/1708746382742520052

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்களுக்கு பரிச்சயமான மற்றும் பரிட்சை இல்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் அந்த வகையில் இந்த சீசனலும் ரசிகர்களுக்கு பரீட்சை இல்லாத போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் வெந்து தணிந்தது காடு எஸ்டிஆருக்கு ஒரு வணக்கத்தை போடு என்ற வசனம் மூலம் பிரபலமான கூல் சுரேஷ்ஷும் இந்த சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.

இவர் சினிமாவில் நடித்து பிரபலமானதை விட சமூக வலைதளத்தில் மூலம் பிரபலமானது தான் அதிகம். மேலும் அடிக்கடி ஏதாவது இருக்கு கிறுக்குத்தனமான செயல்களை செய்து சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறார். அந்த வகையில் தற்போது பிக் பாஸில் இவர் என் பேரு கூல் ஆன ' கூ 'வ எடுத்துட்டு சிலர் 'பூ' னு கூப்புடுவாங்க என்று படு ஆபாசமாக பேசினார். இதனை கேட்டு அருகில் அமர்ந்து இருந்த பூர்ணிமாவும் சிரித்தார். இந்த வீடியோவை பகிரும் டிவிட்டர் வாசிகள் பலர் இது குடும்பங்களும் பார்க்கும் நிகழ்ச்சி என்பதை மறந்து விட்டார்களா என்று கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இவர் தமிழ் சினிமா உலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த சாக்லேட் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.அதற்கு பிறகு இவர் பல படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்து பிரபலமானார். பின் காமெடியனாக தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். ஆனால், சமீப காலமாக இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் அமையவில்லை.

தற்போது இவர் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் சமீப காலமாக அணைத்து ஹீரோக்களின் படங்களை வித்யாசமாக ப்ரோமோஷன் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேடையில் இவர் தொகுப்பாளினி மீது திடீரென்று மாலை போட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இவரை பலரும் சமூக வலைதளத்தில் திட்டி தீர்க்க துவங்கினர்.

https://twitter.com/U_Views_Off/status/1708753811182071935

பின்னர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். நான் அந்த சகோதரி மீது விளையாட்டாக மாலை போட்டேன். அதற்காக மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்கிறேன். நான் விளையாட்டாக செய்தது வினையாகப்போச்சு. வறுமையில் தவிக்கிறேன். எனக்கு யாராவது ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 170

Tamil Behind Talkies AMP · Quick view
View full