ஆடியோவை லீக் செய்யவா, விஷ்ணுவை தெறிக்கவிட்ட ரவீந்தர் - வைரலாகும் ஆடியோ இதோ
பிக் பாஸ் நிகழ்ச்சியால் தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் பிக் பாஸ் 7 போட்டியாளர் விஷ்ணுவுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் ஆடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி பத்தாவது வாரம் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் ஆரம்பமானது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். மேலும், கடந்த வாரம் டபுள் எவிக்ஷனில் ஆர்.ஜே . ஆனந்தியும் சச்சனாவும் வெளியேற்றப்பட்டனர். அதேபோல் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் இருப்பதாகவும், அதில் குறைந்த வாக்குகளை பெற்று சத்யா மற்றும் தர்ஷிகா வெளியேறி இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் ரவீந்தருக்கும், விஷ்ணுவுக்கு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
ரவீந்தர் ரிவ்யூ :
தயாரிப்பாளர் ரவீந்தர், சமீபத்தில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அவர் வீட்டில் இருந்த ஒரு வாரத்திலேயே நல்ல ஸ்டேட்டர்ஜியுடன் விளையாடி விளையாட்டை மிகவும் சுவாரஸ்யம் ஆக்கினார். ஆனால், முதல் வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். இவருடைய எவிக்ஷன் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சி தான். ஆனால், தற்போது அவர் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை ரிவ்யூ செய்து வருகிறார். சமீப காலமாக ரவீந்திரர் கொடுத்து வரும் ரிவ்யூவில் முத்துக்குமரன் தான் பிக் பாஸ் டைட்டிலை வெல்வார் என்றும் சௌந்தர்யாவை தொடர்ந்து விமர்சனம் செய்தும் வந்துள்ளார்.
கடுப்பான விஷ்ணு :
இதனால் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் விஷ்ணுவுக்கும் ரவீந்தருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. விஷ்ணு சௌந்தர்யாவின் நண்பர் ஆவார். அதிருப்தி அடைந்த விஷ்ணு ரவீந்திரரின் மனைவி மகாலட்சுமிக்கு போன் செய்து, ரவீந்தர் சௌந்தர்யாவை இப்படி தொடர்ச்சியாக பேசி வருவது சரியில்லை என்றும், தவறு என்றும் பேசியிருக்கிறார். இதை ரவீந்தரிடம் மகாலட்சுமி கூறியிருக்கிறார். ஆனால், ரவீந்தர் தொடர்ந்து முத்துக்குமரனுக்கு ஆதரவாக பேச விஷ்ணு கடுப்பாகி இருக்கிறார்.
https://www.youtube.com/shorts/V8ZseWUsxGo
ஆடியோவை லீக் பண்ணவா:
அதற்கு ரவீந்தர், நீ சௌந்தர்யாவுக்கு பிஆர்ஓ வேலை செய்வது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. நீ சௌந்தர்யாவிற்கு சொம்பு தூக்குவதால், நானும் அப்படி செய்ய வேண்டுமா, முத்துக்குமரன் பிக் பாஸ் வீட்டில் உண்மையாக விளையாட்டை புரிந்து விளையாடி வருகிறார். அதனால் அவர் ஜெயிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், நீ என்னுடைய மனைவிக்கு போன் பண்ணி, ரவீந்தர் அப்படி பேசுவது தப்பு என்று சொல்லி இருக்க. நீ என்னை மிரட்டுகிறாயா? நீ பேசுனா ஆடியோ என்னிடம் இருக்கிறது அதை நான் லீக் செய்யவா என்றும் மிரட்டி இருக்கிறார் ரவீந்தர். தற்போது இந்த ஆடியோ தான் சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.