முத்துக்குமரன் சுயநலமாக யோசித்தார், ராணவ் விஷயத்தில் தப்பு செய்தேன் - மஞ்சரி ஓப்பன் டாக்

By subhashini · 15/1/2025

விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 100 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார்.

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித், ஜெப்ரி, அன்ஷிதா, ராணவ்,மஞ்சரி ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.

பிக் பாஸ் 8:

பின் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் ராயன் தான் வெற்றி பெற்றார். நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்குவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டி, சண்டை, சச்சரவு எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து ஏற்கனவே வெளியே போயிருந்த போட்டியாளர்களில் எட்டு பேர் உள்ளே சென்று இருந்தார்கள். பிக் பாஸ் வீடே ரணகளமாக இருந்தது. அதன் பின் கடந்த வாரம் அருண் பிரசாத், தீபக் வெளியேறி இருந்தார்கள். இவர்களுடைய எவிக்சன் பலருக்குமே அதிர்ச்சி தான். இப்படி நிகழ்ச்சியில் நன்றாக விளையாடிய போட்டியாளர்கள் வெளியேறியது பலருக்குமே அதிர்ச்சி தான்.

மஞ்சரி பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் நிகழ்ச்சிக்குப் பிறகு மஞ்சரி அளித்த பேட்டியில், நான் வெளியே வந்ததும் பலரும் என்னை அடையாளப்படுத்தி பேசுகிறார்கள். அது ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கிறது. இன்ஸ்டாகிராமில் நிறைய பேர் மெசேஜும் பண்ணி இருந்தார்கள். இதுவரைக்கும் நான் இப்படி இருந்தேன். உங்களை பார்த்த பிறகு ஒரு உத்வேகம் கிடைத்திருக்கு என்றெல்லாம் பலரும் சொல்லியிருந்தது மூலம் நான் நல்ல கேம் விளையாடி இருக்கேன் என்ற திருப்தி கிடைத்தது. ஒரு கட்டத்தில் என்னுடைய கேம் Saturate
ஆகி விட்டது என்று நினைக்கிறேன். அது தான் நான் வெளியே போனதுக்கு காரணமாக இருக்கலாம்.

https://www.youtube.com/watch?v=lQyCn-TKbLI

எவிக்ஷன் பற்றி சொன்னது:

அதே சமயம் நான் நல்லா விளையாடுகிறார்கள், விளையாடவில்லை என்பதை தாண்டி மக்களுக்கு பிடித்தவர்கள் உள்ளே இருக்கிறார்கள். இதில் ஃபேர், அண் ஃபேர் என்ற பேச்சுக்கு நான் போக விரும்பவில்லை. சிலருக்கு ஃபேர் என்று தோணும், சிலருக்கு அண்ட் ஃபேர்ன்னு தோணும். கடந்த வாரம் தீபக் எவிக்ஷனும் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. தீபக் பைனல் மெட்டீரியல். மக்களுக்கும் எனக்கும் அவர் பைனல் போகணும் தான் ஆசையாக இருந்தது. அது நடக்காதது எங்களுக்கு ஏமாற்றம்தான். டிக்கெட் டு பினாலே வாரத்தில் முத்துக்குமரன் பதற்றமாக இருந்ததை அவரை சொல்லியிருந்தார். எல்லோருக்குமே இந்த டிக்கெட் ரொம்ப முக்கியமாக இருந்தது. எல்லோருமே ரொம்ப ஆர்வமாகத்தான் விளையாடினோம்.

திருமணம் பற்றி சொன்னது:

முத்துக்குமரன் சில இடங்களில் சுயநலமாக யோசித்தார் என்று எனக்கு தோன்றியது. அதைத்தான் நான் வீட்டுக்குள் சுட்டிக் காட்டி இருந்தேன். நான் ராணாவுடைய அம்மா வீட்டிற்குள் வந்த சமயத்தில் நீங்கதாம்மா செல்லம் கொடுத்து கெடுக்குறீங்க என்று சொன்னேன். அது உரிமையில் நான் சொன்னது. இந்த விஷயம் வெளியில் இருந்து பார்க்கும் அவர்கள் குடும்பத்தை காயப்படுத்தும் என்று நான் யோசிக்காமல் சொல்லிவிட்டேன். அதை சொல்லி இருக்கவே கூடாது. நான் வெளியில் வந்து தான் வருத்தப்பட்டேன்.
அதேபோல் சிங்கிள் மதர் என்றும், பார்ட்னர் என்றும் நிறைய என்னுடைய பர்சனல் பத்தி எல்லாம் கேள்வி வந்தது. சிங்கிள் மதர் கடைசி வரை சிங்கிளாத்தான் இருக்கணுமா என்று கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full