மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராணவ், கதறும் பெற்றோர் - பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவாரா?

By subhashini · 17/12/2024

விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி டிவியில் தொடங்கி 11வது வாரம் தொடங்கி 72 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.

அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு வருவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும் பொறாமையும் வெடித்துக்கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் 8:

அந்த வகையில் இன்று பிக் பாஸ் புது டாக்ஸ்கை கொடுத்திருக்கிறார். அதில் போட்டியாளர்களுக்கு குறிப்பிட்ட கற்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை தங்களுடைய பார்ட்னர் உதவியுடன் எதிர் அணியினர் கற்களை எடுக்காமல் பாதுகாக்க வேண்டும். இந்த போட்டியில் பவித்ராவும் ஜெஃப்ரியும் ஒரு அணியாக இருந்து தங்களுடைய கற்களை காப்பாற்றி வந்தார்கள். அப்போது ராணவ், பவித்ராவிடமிருந்து கற்களை எடுக்க முயலும் போது ஜெஃப்ரி ராணவை கீழே தள்ளி இருக்கிறார். இதனால் ராணவுக்கு தோள்பட்டையில் பயங்கரமாக அடிபட்டு இருக்கிறது.

சிகிச்சையில் ராணவ்:

ராணவ் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போது கூட ஜெஃப்ரி, பவித்ரா, சவுந்தர்யா மூவரும், அவன் நடிக்கிறான், டிராமா போடுகிறான் என்றெல்லாம் பேசி இருந்தார்கள். அதற்குப்பின் அருண், ராணவை உடனடியாக கன்ஃபெக்சன் ரூமுக்கு அழைத்து சென்று உதவி செய்திருந்தார். பின் ராணவை மருத்துவமனையில் அனுமதித்து இருந்ததாக பிக் பாஸ் அறிவித்து இருந்தார். இதனால் போட்டியாளர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது.

வேதனையில் ராணவ் அம்மா:

ஏற்கனவே ராணவ், கழுத்து வலியால் துடித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய அம்மா பிக் பாஸ்க்கு நேரடியாக போன் செய்து, என் மகனை வீட்டுக்கு அனுப்பி விடுங்கள். அவன் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கஷ்டப்படுகிறான். அதை பார்க்க முடியவில்லை என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். ஆனால், பிக் பாஸ் அவருக்கு தைரியம் கொடுத்து இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் அன்று முழுவதுமே ராணவ் அம்மா தூங்காமல் இருந்தாராம்.

ராணவ் அம்மா செய்தது:

ராணவ் உடல்நிலை நினைத்து நெஞ்சுவலி வந்தது என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட ராணவ் அம்மா சொல்லி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது ராணவுக்கு அடிப்பட்டு இருக்கும் நிலையில் அவருடைய பெற்றோர்கள் பிக் பாஸுக்கு அழுத்தம் கொடுத்தும், ராணவை வெளியில் அனுப்ப சொல்லி முறையிட்டும் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் ராணவ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இனி தொடருவாரா? இல்லை வெளியே செல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full