டைட்டில் வென்றால் கூட இவ்ளோ கிடைக்காது, பிக் பாஸ் ரஞ்சித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் ரஞ்சித் வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 78 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு வருவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும் பொறாமையும் வெடித்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் புது டாக்ஸ்கை கொடுத்திருந்தார். அதில் போட்டியாளர்களுக்கு குறிப்பிட்ட கற்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை தங்களுடைய பார்ட்னர் உதவியுடன் எதிர் அணியினர் கற்களை எடுக்காமல் பாதுகாக்க வேண்டும். இந்த போட்டியில் ஜெஃப்ரி, ராணவை கீழே தள்ளி இருந்தார். இதனால் ராணவுக்கு தோள்பட்டையில் பயங்கரமாக அடிபட்டு இருந்தது.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
ராணவ் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போது கூட சவுந்தர்யா கிண்டலாக பேசி இருந்தார். அதற்குப்பின் ராணவை மருத்துவமனையில் அனுமதித்து இருந்ததாக பிக் பாஸ் அறிவித்து இருந்தார். இதனால் போட்டியாளர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. பின் ராணவ் மூன்று வாரத்திற்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்னதாக பிக் பாஸ் கூறியிருந்தார். இதை அடுத்து கேப்டன்சி டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் முத்துக்குமரன்,ஜெப்ரி, பவித்ரா ஆகியோருக்கு இடையே போட்டி நடந்தது.
வெளியேறிய நபர்:
அப்போது முத்துக்குமரன், பவித்ராவுக்காக விட்டுக் கொடுத்திருந்தார். ஆனால், பிக் பாஸ் இதை கண்டித்தும் முத்து குமரன் செய்து இருந்தார். இதனால் பிக் பாஸ் கேப்டன்சி டாஸ்கை ரத்து செய்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இனிவரும் நாட்களில் நாமினேஷன் பிரீ பாஸ் கிடையாது என்று அறிவித்திருக்கிறார். இதனால் முத்துக்குமரன் மனமுடைந்து மன்னிப்பு கேட்டும் பிக் பாஸ் அதைக் கண்டு கொள்ளவே இல்லை. மேலும், இந்த வாரத்திற்கான எவிக்ஷனில் குறைவான வாக்குகளை பெற்று ரஞ்சித் வெளியேறி இருந்தார்.
ரஞ்சித் சம்பளம்:
இந்த நிலையில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் ரஞ்சித் வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஒரு நாளைக்கு 50 ஆயிரம் ரூபாய்பேசப்பட்டிருந்தது. இவர் இதுவரை பிக் பாஸ் வீட்டில் 77 நாட்கள் இருந்திருக்கிறார். மொத்தமாக இவருக்கு 38 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் டைட்டில் வென்றால் கூட இவ்வளவு கிடைக்காது. காரணம், டைட்டில் வென்றவர்களுக்கு ₹50 லட்சம் கொடுக்கப்படும். பிடித்தம் போக அவர்களுக்கு 30 லட்சம் தான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.