அங்க போறதுக்கு முன்னாடி இதெல்லாம் சொன்னாங்க - BB Freeze Task குறித்து மஞ்சரியின் தங்கை கணவர் சொன்னது
பிக் பாஸ் 8 வீட்டிற்குள் சென்று வந்த அனுபவம் குறித்து போட்டியாளர் மஞ்சரியின் தங்கை கணவர் பகிர்ந்திருக்கும் செய்தி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 80 ஆவது நாள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, ரவீந்தர் தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழிச்சி ஆரம்பமானது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
பிக் பாஸ் 8 :
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு வருவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும் பொறாமையும் வெடித்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த வாரம் நடந்த டாஸ்கில் ராணவுக்கு தோள்பட்டையில் பயங்கரமாக அடிபட்டு இருந்தது. சிகிச்சைக்கு பின் ராணவ் மூன்று வாரத்திற்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்னதாக பிக் பாஸ் கூறியிருந்தார். இதை அடுத்து கேப்டன்சி டாஸ்க்கில் முத்துக்குமரன், பவித்ராவுக்காக விட்டுக் கொடுத்திருந்தார். இதனால் பிக் பாஸ் கேப்டன்சி டாஸ்கை ரத்து செய்து இருந்தார். இதனால் முத்துக்குமரன் மனமுடைந்து மன்னிப்பு கேட்டும் பிக் பாஸ் அதைக் கண்டு கொள்ளவே இல்லை.
https://www.youtube.com/watch?v=RBc2ijTiefM
ப்ரீஸ் டாஸ்க் :
இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ப்ரீ டாஸ்க் நடைபெறுகிறது, அதாவது போட்டியாளர்களுடைய உறவினர்கள் உள்ளே வருகிறார்கள். அந்த வகையில் நேற்று மஞ்சரின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று வந்தனர். இது தொடர்பாக மஞ்சரியின் தங்கை கணவரும் ஓவியருமான பிரேம் டாவின்சி தன் அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில், பிக் பாஸ் போறதுக்கு முன்னாடி நிறைய கண்டிஷன் போட்டதாகவும், எது பேசணும் எது பேசக்கூடாது என்று சொல்லி அனுப்பியதாகவும் கூறியிருக்கிறார். அதனால் எல்லா போட்டியாளர்களிடமும் வழக்கமான நல விசாரிப்பைத் தவிர எதுவும் பேசவில்லையாம்.
மஞ்சரியின் தங்கை கணவர் :
அதோடு, சௌந்தர்யா குறித்து அவர் சொன்ன சில வார்த்தைகளைத் தவிர்த்து இருக்கலாம் என்று வெளியே வந்ததும் அவரிடம் சொன்னார்களாம். அதாவது சௌந்தர்யாவுக்கு அவங்க ரசிகர்கள் ஆதரவு தருகிறார்கள் என்று அவர் பிக் பாஸ் வீட்டில் கூறியிருந்தார். அதை தவிர்த்து இருக்கலாம் என்று சொன்னதாக கூறியிருக்கிறார். மேலும், மஞ்சரி முதல் நாளில் இருந்து தற்போது வரை ஒரே மாதிரி இருக்கிறார் என்றும், நாளுக்கு நாள் வலுவான போட்டியாளராக விளையாடிட்டு இருக்காங்க என்று கூறியிருக்கிறார்.
மஞ்சரி குறித்து :
அதோடு மஞ்சரி கண்டிப்பாக டாப் 5 போட்டியாளர்களில் ஒருத்தராக இருப்பார் என்று நம்பிக்கை இருப்பதாகவும், அதையும் தாண்டி அவர் டைட்டில் ஜெயித்தால் அது அவங்க வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக மாறிவிடும் என்று பகிர்ந்து இருக்கிறார். அதோடு மஞ்சரி தனது பாய் ஃப்ரண்டை தான், பார்ட்னர் என்று குறிப்பிடுவதாகவும், இறுதிச்சுற்றின் போது அல்லது ஒருவேளை அவர் டைட்டில் வாங்கினால் அந்த சமயம் கண்டிப்பாக அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரலாம் என்று மஞ்சரியின் தங்கை கணவர் தனது பிக் பாஸ் அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.