போட்டியாளர்களை இப்படி தான் தேர்ந்தெடுக், சிபாரிசு இருக்கா? பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் அதிரடி அப்டேட்

By subhashini · 19/8/2024

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் முறை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதுவரை ஏழு சீசன் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஏழு சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சி பல பேரின் கேரியருக்கு துணையாக நின்று இருக்கிறது.

பலரின் வாழ்க்கையையும் மாற்றி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு பிக் பாஸ் வீடும் பிரபலம் தான். இந்நிலையில் கடந்த ஏழு சீசன்களாக தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து சிம்பு அல்லது ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்கள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இறுதியாக நடிகர் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கமிட் ஆகி உள்ளார் என்று கூறப்படுகிறது.

பிக் பாஸ் சீசன் 8:

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் சேனல் தரப்பில் இருந்து வெளியிடவில்லை. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் வேலைகளும் செய்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக சினிமா பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், யூட்யூபர்கள் என எல்லா தரப்பில் இருந்தும் சில பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். அந்த வகையில் ரியாஸ் கான், அமலா ஷாஜி, ரோபோ சங்கர், பாடகி கல்பனா, பப்லு ப்ரித்திவிராஜ், நடிகர் அஸ்வின் என்று பல பெயர்கள் சோசியல் மீடியாவில் அடிபட்டு வந்தது.

போட்டியாளர்கள் குறித்த விவரம்:

சமீபத்தில் தான் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிகர் அருண் தேர்வாகியுள்ளதாக கூறப்பட்டது. அதை தொடர்ந்து பரீனாவும், ஜோயாவும் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது. வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்ல என்னென்ன செய்ய வேண்டும்? யாரை பிடிக்க வேண்டும்? போன்ற பல கேள்விகளுக்கு சேனல் தரப்பில் சொன்னது, தமிழில் முதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த போது ஆர்வமாக சில பேர் ஒத்துக்கொண்டார்கள். விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகிறது என்றால் அது ஹிட்டாகும் என்று நம்பினார்கள்.

போட்டியாளர்கள் தேர்வு செய்யும் முறை:

சில பேர், இந்த நிகழ்ச்சி பற்றி சரியான புரிதல் இல்லாததால் கலந்து கொள்ள தயங்கி இருந்தார்கள். இரண்டாவது சீசனில் நிகழ்ச்சி குறித்து ஓரளவு எல்லோருக்குமே புரிதல் வந்தது. அதனால் துணிச்சலுடன் கலந்து கொண்டார்கள். ஒவ்வொரு வருஷமும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு இவர்களை எல்லாம் அணுகலாம் என்று நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களும், சேனல்களும் போட்டியாளர்களை குறித்த முடிவை எடுப்பார்கள். அதோடு போட்டியாளர்களுக்கான தகுதி, நிபந்தனைகள் என்று ஒரு பெரிய பட்டியலை வைத்திருக்கிறார்கள். அந்த நிபந்தனைகளுக்கு எல்லாம் சம்மதிப்பவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். மத்தபடி இவரை பிடிக்கலாம், அவர்களை சிபாரிசு செய்ய சொல்லலாம் என்றெல்லாம் சொல்வதெல்லாம் வதந்தி. ஆதாரம் இல்லாமல் சொல்லக்கூடாது.

சேனல் தரப்பில் சொன்னது:

சேனலில் இருந்து தான் போட்டியாளர்களை தேர்வு செய்கிறார்கள் என்பதுதான் உண்மை.
அதே போல் சில பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முயற்சி செய்ய சேனல்களையும், சேனலுக்கு நெருக்கமானவர்ளையும் தேடிப் போவதும் நடக்கிறது. இதற்கு எத்தனையோ உதாரணங்களை சொல்லலாம். முந்தைய சீசனில் கலந்து கொண்டு வெளியில் வந்தவர்கள் ஓப்பனாக பேட்டி கூட தந்திருக்கிறார்கள். சில போட்டியாளர்கள் தங்களுடைய நண்பர்கள், உறவினர்களுக்கு சிபாரிசு செய்வது நடந்திருக்கிறது. அமீர்- பாவனி சிபாரிசில் தான் அமீரின் தங்கை ஐசு கலந்திருந்தார். அதே போல் பாலாஜி முருகதாஸ் சிபாரிசில் தான் அனன்யா கலந்திருந்தார். ஆக மொத்தம் ஒரு நிகழ்ச்சி ஹிட் அடிக்கிறது என்றால் அதில் நுழைய பல வழிகளில் முயற்சி செய்யத்தான் செய்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி பொருத்தவரை சிபாரிசு என்ற மேட்டரை ஒதுக்கி விடவும் முடியாது. ஆனால், ஃபைனல் முடிவை சேனல் தரப்பு தான் எடுப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full