பிக் பாஸ் சீசன் 8 வைல்ட் கார்ட் போட்டியாளர்களின் சம்பளம் விவரம்- யாருக்கு அதிகம் தெரியுமா?
பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் சம்பளம் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் இணையத்தில் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி ஐந்தாவது வாரம் முடிந்து 39 நாள்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் என்பதால் ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை, கலவரம் தொடங்கி விட்டது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
பின் நான்காவது வாரம் எலிமினேஷன் நடக்கவில்லை. அதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக 6 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்து இருக்கிறார்கள். அதில் மாடல் அழகி வர்ஷினி வெங்கட், சீரியல் நடிகர் ராயன், நடிகரும் மாடலும் ஆன ராணவ், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, ரியா தியாகராஜன், சுஜா வருணியின் கணவர் சிவக்குமார் ஆவார்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
தற்போது போட்டியாளர்களுக்குள் சண்டை, போட்டி, பொறாமை, கலாட்டா கலவரம் என்று நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. போன வாரம் கடந்து வந்த பாதை டாஸ்க் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு போட்டியாளருமே தங்களுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவங்களை குறித்து மனம் திறந்து பேசி இருந்தார்கள். பின் ஐந்தாம் வாரத்திற்கான நாமினேஷனில் முத்துக்குமரன், தீபக், பாஸ் ரஞ்சித், அருண், ஜாக்லின், பவித்ரா, சாச்சனா, ஆனந்தி, அன்ஷிதா, சுனிதா ஆகியோர் பெயர் இருந்தது.
நாமினேட் லிஸ்ட்:
இதில் சுனிதா வெளியேறி இருந்தார். இது பலருக்கும் ஷாக்கிங் தான். பின் இந்த ஆறாவது வாரம் நாமினேஷனில் தீபக், சௌந்தர்யா, சிவக்குமார், ராணவ், ரஞ்சித், சத்யா, ஜெப்ரி, வர்ஷினி, தர்ஷிகா, மஞ்சரி, சத்யா, ரியா, சாச்சனா ஆகியோர் பெயர்கள் வந்து இருக்கிறது. இந்த வாரம் அருண் பிரசாத் தலைவர் ஆகி இருக்கிறார். மேலும், பள்ளி டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் மாணவர்களாக மாறி செய்யும் அலப்பறைகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
வைல்ட் கார்ட் சம்பளம்:
இந்த நிலையில் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரி கொடுத்த போட்டியாளர்களின் சம்பள பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு நாளைக்கு பிக் பாஸ் வீட்டில் இவர்கள் இருப்பதற்கு,
ராயன் - 15 ஆயிரம்
சிவகுமார், ராணவ், வர்ஷினி வெங்கட்- 12 ஆயிரம்
மஞ்சுரி, ரியா - 10 ஆயிரம்