கம்ருதினுக்கு Red Card கொடுக்க சொன்ன சேனல் - விஜய் சேதுபதியின் நீண்ட விவாதம், நடந்தது என்ன?

By subhashini · 3/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 90 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், வைல்ட் கார்ட்டில் திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, திவாகர், கலையரசன், பிரவீன், துஷார், கெமி, ப்ரஜன்,ரம்யா, வியானா, எப் ஜே மற்றும் ஆதிரை, அமித், கனி ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.

பிக் பாஸ் 9:

இந்த வாரம் டிக்கட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்க்கில் அரோரா வெற்றி பெற்றிருக்கிறார்.
பின் இந்த நிகழ்ச்சியில் நடந்த கார் டாஸ்க்கில் போட்டியாளர்கள் பார்வதி- கம்ருதீன் செய்திருக்கும் செயல்தான் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருக்கிறது. சான்ட்ராவை காரில் இருந்து பார்வதி- கம்மு இருவரும் சேர்ந்து கால், கையில் தள்ளியும் உதைத்தும் கீழே தள்ளி விட்டிருக்கிறார்கள். இதை அங்கிருந்த மற்ற போட்டியாளர்கள் எல்லோருமே கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=dfTbWdi2x8w

ரெட் கார்ட்:

இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையாகி இருக்கிறது.
இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். பின் விஜய் சேதுபதி பார்வதி- கம்மு இருவருக்கும் ரெட் கார்ட் கொடுத்து இருக்கிறார். இந்நிலையில் இந்த ரெட் கார்டு எவிக்ஷனுக்கான காரணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் ரெட் கார்ட் தருவது தேவையா? என்ற விவாதம் சேனல் தரப்பில் நடந்திருக்கிறது. அப்படி ஒருவேளை ரெட் கார்டு கொடுப்பதாக இருந்தால் கம்ருதீனுக்கு மட்டும் கொடுக்கலாம் என்று சேனல் தரப்பில் நினைத்திருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி சொன்னது:

பல சர்ச்சைகளுக்குப் பிறகு அவருக்கு வார்னிங் கொடுத்தும் அவர் திருத்திக் கொள்ளவில்லை. அதனால் அவரை வெளியேற்றிவிடலாம் என்று சேனல் தரப்பில் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு விஜய் சேதுபதி, நடந்த அந்த சம்பவத்தின் போது பார்வதி, கம்ருதினை தூண்டியது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. கம்ருதியுடன் பார்வதியையும் சேர்ந்து வெளியே அனுப்புவது தான் சரியாக இருக்கும். ஒருவரை மட்டும் அனுப்பினால் அன்ஃபார் எவிக்ஷன் என்று சொல்லுவார்கள். ரெண்டு பேரையும் அனுப்பலாம் என்று சொல்லி இருக்கிறார். நீண்ட விவாதத்திற்கு பிறகு தான் டபுள் ரெட் கார்டு எவிக்ஷன் என்ற முடிவு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full