பைனலிஸ்டுக்கு பிக் பாஸ் வாரி வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? லிஸ்ட் இதோ
விஜய் டிவியில் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி சமீபத்தில் தான் கோலாகலமாக முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருந்தார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வந்தார்.
இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், வைல்ட் கார்ட்டில் திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள். இறுதியில் பிக் பாஸ் வீட்டில் வினோத், விக்ரம், சபரி, சான்ட்ரா, அரோரா, திவ்யா ஆகியோர் இருந்தார்கள். நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் உடைய கிராண்ட் பினாலே சுற்று நடைபெற்றது. இதில் முதல் இடத்தை பிக் பாஸ் டைட்டில் பட்டத்தையும் திவ்யா கணேஷ் பெற்றிருக்கிறார்.
பிக் பாஸ் 9:
இதுவரை டைட்டில் பெற்றதை மூன்றாவது முறையாக பெண் போட்டியாளர் பெற்று இருக்கிறார். அதோடு இரண்டாவது முறையாக வைல்ட் கார்ட் போட்டியாளர் டைட்டில் பட்டதை வென்றிருக்கிறார். இரண்டாவது இடத்தை சபரி பெற்றிருக்கிறார். மூன்றாவது இடத்தை விக்ரம், நான்காவது இடத்தை அரோரா பெற்றிருக்கிறார். இந்நிலையில் பைனலுக்கு தேர்வான திவ்யா, அரோரா, சபரி, விக்ரம் உடைய சம்பளம் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அரோரா:
இவர் சோசியல் மீடியா மூலம் தான் பிரபலமாகி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஒரு நாளைக்கு 12000 சம்பளம் பேசப்பட்டது. இவர் மொத்தம் பிக் பாஸ் வீட்டில் 105 நாட்களில் இருந்திருக்கிறார். இவருக்கு ஒட்டுமொத்தமாக 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது.
விக்ரம்:
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஒரு நாளைக்கு 15,000 சம்பளமாக பேசப்பட்டது. இவர் மொத்தம் பிக் பாஸ் வீட்டில் 105 நாட்கள் இருந்திருக்கிறார். இவருக்கு மொத்தமாக 15 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சபரி:
இவர் சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவருக்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டது. இவர் மொத்தம் பிக்பாஸ் வீட்டில் 105 நாட்கள் இருந்திருக்கிறார். மொத்தமாக இவருக்கு 21 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
திவ்யா கணேஷ்:
இவர் வைல்ட் கார்ட் போட்டியாளராக 28 வது நாளில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். இவர் பிக்பாஸ் வீட்டில் 77 நாட்கள் தான் இருந்தார். இவருக்கு ஒரு நாளைக்கு 30,000 சம்பளமாக பேசப்பட்டது. அதன்படி இவருக்கு மொத்தம் 23 லட்சத்து 10 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டது. அதோடு இந்த சீசனில் அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளர் திவ்யா கணேஷ் தான். இது தவிர இவர் டைட்டில் வென்றதற்காக 50 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது.