அதிரடியாக நடந்த நான்காவது வாரம் நாமினேஷன் – யார் யார் தெரியுமா? முழு லிஸ்ட் இதோ

By subhashini · 28/10/2025

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் நான்காவது வாரம் நாமினேஷன் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 23 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. பின் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மூன்றே நாளில் போட்டியாளர் நந்தினி திடீர் என்று வெளியேற்றப்பட்டிருந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நந்தினி வெளியேறினார்.

பிக் பாஸ் 9:

பின் முதல் வார எவிக்ஷனில் பிரவீன் காந்தி வெளியேறி இருந்தார். இதற்கிடையில் கேப்டன் டாஸ்க் நடைபெற்று இருந்தது. இதில் துஷார் தான் வெற்றி பெற்று வீட்டின் தலைவரானார். பின் பிக் பாஸ், டிசிபிலின் இல்லை என்று தல பதவியை பறித்தார். பின் நிகழ்ச்சியை சுவாரசியமாக்கும் வகையில் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இரண்டாவது வாரம் குறைவான வாக்குகளை பெற்று அப்சரா தான் வெளியேறி இருந்தார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மூன்று போட்டியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். இந்த வாரம்
வைல்ட் கார்ட் என்ட்ரி இருக்கும் என்று பிக் பாஸ் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். மேலும், மூன்றாவது வாரம் நடந்த நாமினேஷனில் குறைவான வாக்குகள் பெற்று ஆதிரை தான் வெளியேறி இருந்தார். கடந்த வாரம் ஆதிரையினுடைய நடவடிக்கைகள் எதுவுமே சரியில்லை என்று விமர்சித்து இருந்தார்கள்.

View this post on Instagram

A post shared by JioHotstar Tamil (@jiohotstartamil)

நான்காவது வாரம் நாமினேஷன்:

இப்படி இருக்கும் நிலையில் இன்று நான்காவது வாரத்திற்கான நாமினேஷன் தாக்கல் நடைபெற்றது. அதில்,
கனி - பார்வதி, கம்ருதின்
கானா வினோத் - திவாகர், கலையரசன்
திவாகர் - கானா வினோத், கம்ருதின்
கலையரசன் - கானா வினோத், கம்ருதின்
ரம்யா - விக்ல்ஸ் விக்ரம், கம்ருதின்
FJ - பார்வதி, கம்ருதின்
சபரி - பார்வதி, கானா வினோத்
சுபிக்ஷா - கானா வினோத், கம்ருதின்
கம்ருதின் - அரோரா, கலையரசன்
கெமி - பார்வதி, கம்ருதின்
பார்வதி - கெமி, அரோரா
விக்கல்ஸ் விக்ரம் - பார்வதி, கம்ருதின்
வியானா -கானா வினோத், கம்ருதின்
அரோரா - கலையரசன், பார்வதி
துஷார் - பார்வதி, கம்ருதின்
பிரவீன் - துஷார், கம்ருதின்
இதில் கம்ருதீன், பார்வதி, கானா வினோத் ,அரோரா, கலையரசன் ஆகியோர் பெயர் இடம் பெற்று இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full