பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேற காரணம் இதுதானா? அதிருப்தியில் ரசிகர்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 51 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கடந்த வாரத்தில் அமித், கனி, சுபிக்ஷா, கெமி, சாண்ட்ரா, திவ்யா, பார்வதி, வியானா, சபரி, விக்ரம், ப்ரஜன், அரோரா, ரம்யா ஆகியோர் பெயர்கள் நாமினேட் பட்டியலில் இடம் பெற்று இருந்தது. இதில் குறைவான வாக்குகளை பெற்று கெமி தான் வெளியேறி இருந்தார்.
பிக் பாஸ் 9:
மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரபலமான நபர்களில் ஒருவராக கலந்து கொண்டிருந்தவர் கெமி. இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் புகழ்பெற்றவர். அது மட்டும் இல்லாமல் இவர் முன்னாள். கூடை பந்து வீராங்கனை. அதனை எடுத்து இவர் படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களிலும் குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த பிரபலத்தின் மூலம் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
கெமி குறித்த தகவல்:
இவர் நிகழ்ச்சியில் நன்றாகத்தான் விளையாடி வந்தார். எந்த டாஸ்க் கொடுத்தாலும் அதை சிறப்பாக தான் செய்து வந்தார். கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியிலிருந்து கெமி வெளியேறி இருந்தார். இவர் வெளியேறியது நியாயமே இல்லை என்றெல்லாம் கமெண்ட்ஸ் போட்டு இந்தார்கள். மேலும், கெமி வெளியேறியதற்கு இன்னொரு ஒரு முக்கிய காரணம், இவர் ஒரு பெரிய திரைப்படத்தில் கமிட்டாகி இருப்பதாகவும், அந்த படத்தில் நடிக்க வேண்டி இருந்ததால் தான் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
கெமி சம்பளம்:
இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கெமி வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது, கெமி பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்கு ஒரு நாளைக்கு 8000 சம்பளம் பேசப்பட்டிருந்தது. இவர் மொத்தம் பிக்பாஸ் செட்டில் 50 நாட்கள் இருந்திருக்கிறார். ஆகவே இவருக்கு 4 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.