சரவெடியாக நடக்கும் நாமினேஷன் - யார்? யாரை சொல்லி இருக்காங்க பாருங்க - லிஸ்ட் இதோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 57 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.
இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, திவாகர், கலையரசன், பிரவீன், துஷார் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். மேலும், வைல்ட் கார்ட்டில் திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள்.
பிக் பாஸ் 9:
பின் கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று கெமி தான் வெளியேறி இருந்தார். இந்த எட்டாவது வாரத்தில் fj கேப்டன் ஆகி இருக்கிறார். எட்டாவது வாரத்தில் நடந்த நாமினேஷனில் சாண்ட்ரா, ப்ரஜன், திவ்யா, கனி, கம்ருதீன், விக்ரம், அமித், ரம்யா, வியானா, அரோரா,பார்வதி ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருந்தது. நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து இருப்பதால் போட்டியாளர்கள் மத்தியில் ஆட்டம் சூடு பிடித்து இருக்கிறது.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
மேலும், இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்றது. இதில் பிக் பாஸ் வீடு ஸ்கூலாக மாறி இருந்தது. ப்ரஜன் பிரன்சிபல், கனி மற்றும் அமித் ஆசிரியர்களாகவும், பார்வதி மற்றும் fj வார்டன்களாகவும் இருந்தார்கள். மற்ற போட்டியாளர்கள் மாணவ, மாணவிகளாக பங்கேற்று இருந்தார்கள். கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பெரிதாக கலவரம் இல்லாமல் நிகழ்ச்சி நன்றாகவே சென்றது. பின் விஜய் சேதுபதி, fjவை வெளுத்து வாங்கி இருந்தார். அதுமட்டுமில்லாமல் இந்த வாரம் ரீ என்ட்ரியில் ஆதிரை உள்ளே சென்று இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=lE9gEgZO1Qw
நாமினேஷன் லிஸ்ட்:
இந்த ஒன்பதாவது வாரத்தில் நடந்த தல போட்டியில் ரம்யா வெற்றி பெற்றிருக்கிறார். இந்நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றிருக்கிறது. இதில், சாண்ட்ரா, அமித், பிரஜன், திவ்யா,fj, விக்ரம்,
கானா வினோத், கனி ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது. இதில் இந்த வாரம் நிகழ்ச்சியை விட்டு யார் வெளியே போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.