ரெட் கார்ட் விவகாரம், கம்ருதீன்-பார்வதி வன்மம், சான்ட்ரா மனநிலை - நடிகர் ப்ரஜின் ஓபன் டாக்

By subhashini · 6/1/2026

கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் கம்ருதீன்- பார்வதி இருவரின் ரெட் கார்ட் விவகாரம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. சாண்ட்ராவை காரிலிருந்து எட்டி உதைத்த காரணத்தினால் கம்ருதீன், பார்வதி இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிக் பாஸ் போட்டியாளரும், சான்ட்ராவின் கணவருமான பிரஜன் அளித்த பேட்டியில்,
ஒரு விளையாட்டு விளையாட்டாக ஆடனும். தப்பாக விளையாடினதால் தான் அவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்தார்கள். இருப்பதிலேயே ரொம்ப மோசமான ஒரு விஷயம் ரெட் கார்ட். நீங்க திரும்ப செலிப்ரேஷன்க்கு வரவே முடியாது. சம்பளம் பற்றி எதுவும் எனக்கு தெரியலை.

கார் டாஸ்கில் ஒரு சின்ன காரில் ஒன்பது பேர் எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்பது தான். சில விஷயங்கள் பார்வதி பண்ணி இருப்பார்கள். ஆரம்பத்தில் ட்ரிகர் பண்ணி கம்ருதீன் உள்ள வந்து ஃபேமிலியை இழுத்து ரொம்ப தரக்குறைவாக பேசி இருப்பார். என்னதான் டிரிகர் பண்ணி இருந்தாலும் அவ்வளவு மோசமாக பேசிருக்க தேவையில்லை. ஓரு பெண்ணை இரண்டு பேர் சேர்ந்து உதைப்பது பெரிய தப்பு. இது பிளான் பண்ணி பண்ண விஷயம். எட்டி உதைத்து விட்டு கம்ருதீன், இல்லைன்னு வேற சொல்கிறார்கள். அப்ப பார்க்கிற ஆடியன்ஸ் என்ன முட்டாளா? விழுந்ததும் பானிக் அட்டாக் தான் வந்தது. அது வலிப்பு கிடையாது.

ப்ரஜின் பேட்டி:

பிக்ஸ் வேற, பானிக் அட்டாக் வேற. ஒருத்தரை உட்கார வைத்து லாக் பண்ணி பல தகாத வார்த்தைகள் பயன்படுத்தி விட்டார்கள். அவர் சொன்ன வார்த்தைகள் ரொம்ப தப்பு. எனக்கு அவர் மேல ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கு. கொஞ்சம் யோசித்து இருக்கலாம். சாண்ட்ராவுக்கு வீட்டில் இது மாதிரி ஒரு முறை நடந்திருக்கு. அது அதிர்ச்சியில் நடந்தது தான். டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் விட்டுட்டு சபரி, வினோத் இறங்கியது பெரிய விஷயம். அவங்க எல்லோருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். அதுதான் மனிதாபிமானம்.

ரெட் கார்ட் விவகாரம்:

சோசியல் மீடியாவில் சான்ட்ரா நடிக்கிறாங்கன்னு சொல்கிறார்கள். அவங்க ரெண்டு பேரும் வெளியில் வந்துட்டாங்க. அடுத்து வேற என்ன பண்ண முடியும், பிஆர் டீம் வைத்து இதுதான் பண்ண முடியும். பயத்தில் வர்றதுதான் பேனிக் அட்டாக். அவங்க பண்ணதில் சான்ட்ரா ரொம்ப பயந்து விட்டார்கள். அதனால் தான் கம்ருதீன் மன்னிப்பு கேட்க வரும்போது அவங்க பயந்து கத்திருப்பார்கள். பார்வதி வந்தப்பா அங்கிருந்து போயிருப்பாங்க. பயந்த ஆட்கள் எப்ப பார்த்தாலும் பயந்துட்டே தான் இருப்பாங்க. கம்ருதீன் இடத்தில் நான் இருந்தாலும் எனக்கும் அப்படித்தான் தோன்றியிருக்கும். உங்களுக்கெல்லாம் அது ஆக்டிங் ஆகத்தான் தெரியும். ஆனால், அது நடிப்பு கிடையாது.

https://www.youtube.com/watch?v=KocIUzVnFq0

கம்ருதீன்-பார்வதி பற்றி சொன்னது:

தப்பு பண்றதுக்கு முன்னாடி யோசிக்காமல் தப்பு பண்ணிட்டு பின்னாடி யோசிப்பதில் எந்த பயனும் இல்லை.
பார்வதி வீட்டை விட்டு வெளியே போனப்ப யாரும் வந்திருக்க மாட்டார்கள். கம்ருதீன் டிரிகர் செய்யப்படாமல் இருந்தால் கண்டிப்பாக டாப் 5ல் இருந்திருப்பான். இப்பவும் பார்வதி, கம்ருதீன் மேல் கோபமில்லை. அவங்க ரெண்டு பேரும் வெளியில் போயிட்டு நல்லா இருக்கட்டும். அவங்க பண்ண தப்புக்கு தண்டனை அனுபவித்து விட்டார்கள். ஒருவேளை பார்வதி எட்டி உதைக்கும் போது இவன் தடுத்து இருந்தால் அந்த இடத்தில் இவன் ஹீரோவாக இருப்பான். என்னோட ஒரு குழந்தை பார்வதியை ரொம்ப பிடிக்கும். ஷார்ட்சில் பார்க்கும்போது
என் மகள் அழுது விட்டாள். நான் ஏதோ சொல்லி சமாளித்தேன் என்று பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full