அழுது அழுது ரொம்ப வலிக்குது, நல்லாதான் விளையாடினேன் - பிக் பாஸ் பிரவீனின் உருக்கமான வீடியோ
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் பிரவீன் வெளியிட்டிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 36 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். மேலும், வைல்ட் கார்ட்டில் திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள். இவர்கள் வந்த உடன் நிகழ்ச்சி சரவெடியாக சென்று கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்பதால் முதலில் துஷார் வெளியே போனார்.
பிக் பாஸ் 9:
இதை அடுத்து நேற்று யாரும் எதிர்பாராத விதமாக பிரவீன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.இந்த நிகழ்ச்சியிலேயே நன்றாக விளையாடிய போட்டியாளர்களில் பிரவீன் ஒருவர். இவர் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை திறமையாக தான் விளையாடி வந்தார். ஆனால், இவருடைய வெளியேற்றம் பலருக்குமே ஷாக் தான். அதோடு பிரவீன் வெளியேற்றியது நியாயம் கிடையாது. பிக் பாஸ் தான் ஏதோ குளறுபடி செய்து இருக்கிறார்கள் என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
பிரவீன் வெளியேற்றம்:
இப்படி இருக்கும் நிலையில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு பிரவீன் வெளியிட்ட வீடியோவில், எவிக்ஷன் பார்த்தேன். அதை பார்த்துவிட்டு என்னாலே முடியவில்லை. அழுதழுது கையெல்லாம் நடுங்குகிறது. ரொம்பவும் மனம் உடைந்து விட்டேன். நான் தவறு செய்து விட்டேனோ, சரியாக விளையாடவில்லையோ, உங்களின் எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்யவில்லையோ என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். அதிலிருந்து வெளியே வந்து பேசிக் கொண்டிருக்கிறேன். ரொம்ப ஸ்ட்ராங்கான லைட் தான் பிக் பாஸ் சீசன் 9. இப்போ நான் இருட்டை பார்த்து விட்டேனோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது தான் உங்களுடைய அன்பு எனக்கு கிடைத்தது.
https://www.youtube.com/watch?v=OjzBSX6X_vQ
பிரவீன் வீடியோ:
நான் வெளியேற்றப்பட்டது நியாயமானதா? நியாயம் இல்லையா? என்று என்னால் சொல்ல முடியவில்லை. கணிக்க முடியாத ஒன்றாக தான் இருக்கிறது. ரொம்பவும் உடைந்து போயிருந்த என்னை உங்கள் அன்பால் தூக்கி விட்டு இருக்கிறீர்கள். உங்கள் அன்புக்கு நான் என்னுடைய நடிப்பின் மூலம் விசுவாசம் ஆக இருப்பேன். எந்தெந்த தளங்களில் எல்லாம் உங்களை மகிழ்விக்க முடியுமோ அதில் எல்லாம் மகிழ்விப்பேன். இது முடிவென்று நினைத்தேன். ஆனால், உங்கள் அன்பால் இது எங்கேயோ போய்க் கொண்டுள்ளது. ஆனாலும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. இந்த வலி எத்தனை நாட்களுக்கு இருக்கும் என்று தெரியவில்லை என்று கூறி இருக்கிறார்.