பிக் பாஸில் நுழைந்து 5 நாளில் வெளியேறிய நந்தினிக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நந்தினி வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசன் தொடங்கி 6 நாள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், குக் வித் கோமாளி 2 டைட்டில் வின்னர் கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.
இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். முதல் நாள் நிகழ்ச்சி அமோகமாக தொடங்கி இருந்தது. பின் முதல் நாளே நாமினேஷன் நடைபெற்றது. இதில் வியானா ,ஆதிரை , அப்சரா , பிரவீன் ராஜ் , பிரவீன் காந்தி, திவாகர், கலையரசன் ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று இருந்தார்கள்.
நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது.
பிக் பாஸ் 9:
இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் நந்தினி திடீர் என்று வெளியேற்றப்பட்டிருக்கிறார். தவிர்க்க முடியாத காரணங்களால் தான் இவர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார் இது தான் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது. அதோடு நந்தினி கோபத்தை நிகழ்ச்சியில் யாரிடம் காட்டுவது என்று தெரியாமல் அனைத்து போட்டியாளர்களிடமே காட்டி இருக்கிறார். யார் ஆறுதல் சொல்ல வந்தாலுமே அவர்களிடம் ஆக்ரோஷமாக பேசி இருக்கிறார். உடனே பிக் பாஸ், நந்தினியை அழைத்து பேசி இருக்கிறார். அப்போது நந்தினி, பிக் பாஸ் வீட்டில் என்னுடைய அன்பை, நேர்மையை மற்றவர்கள் ட்ரோல் செய்கிறார்கள்.
நந்தினி வெளியேற்றம்:
நான் யார் என்பதை காண்பிக்க தான் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தேன். மற்றவர்களுக்கு என் அன்பை நிரூபிக்க நான் வரவில்லை. எல்லோரும் இங்கு பொய்யாக இருக்கிறார்கள். அது எனக்கு பிடிக்கவில்லை. எல்லோரும் என்னை ஒரு மாதிரியாக நடத்துகிறார்கள். நான் இங்கு இருந்து கிளம்பிகிறேன் என்று சொல்கிறார். உடனே பிக் பாஸ், நந்தினியை கிளம்ப சொல்லி விட்டார். இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நந்தினி வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த விவரம் தான் வெளியாகி இருக்கிறது.
நந்தினி சம்பளம்:
அதாவது, பிரபலங்களாக இருந்தால் மட்டும் தான் அதிக அளவில் பிக் பாஸில் சம்பளம் தருவார்கள். புது முகங்களுக்கு குறைவாக தான் சம்பளம் வழங்கப்படும். அந்த வகையில் நந்தினிக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் என்று பேசப்பட்டிருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் ஐந்து நாட்கள் தான் நந்தினி இருந்தார். ஆக மொத்தம் அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது. பிக் பாஸ் வரலாற்றிலேயே மிகக் குறைவான சம்பளத்துடன் வெளியேறிய போட்டியாளர்களில் ஒருவராக நந்தினி திகழ்ந்து இருக்கிறார்.