இரண்டாவது வாரம் நாமினேஷனில் யார் யாரை செய்து இருக்கிறார்கள் தெரியுமா? முழு லிஸ்ட் இதோ

By subhashini · 13/10/2025

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்திற்கான நாமினேஷன் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி ஒரு வாரம் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். முதல் நாள் நிகழ்ச்சி அமோகமாக தொடங்கி இருந்தது. பின் முதல் நாளே நாமினேஷன் நடைபெற்றது. இதில் வியானா ,ஆதிரை , அப்சரா , பிரவீன் ராஜ் , பிரவீன் காந்தி, திவாகர், கலையரசன் ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று இருந்தார்கள்.
நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது.

பிக் பாஸ் 9:

இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் நந்தினி திடீர் என்று வெளியேற்றப்பட்டிருக்கிறார். தவிர்க்க முடியாத காரணங்களால் தான் இவர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என்று கூறப்பட்டது. பின் இது தொடர்பாக பிக் பாஸ் வீடு பொய்யாக இருக்கிறது, போட்டியாளர்கள் நடிக்கிறார்கள் என்று நந்தினி கூறி இருந்தார். பின் கடந்த வாரம் சனி, ஞாயிறு இரண்டு நாட்களில் விஜய் சேதுபதி வந்து போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் வறுத்தெடுத்து இருந்தார்.

முதல் வாரம் வெளியேறியது:

குறிப்பாக கம்ருதீன், பார்வதியால் எதுவுமே பேச முடியவில்லை. இருவரும் செம பல்பு வாங்கி இருந்தார்கள். கடைசியாக முதல் வார எவிக்ஷன் நடந்தது. அதில் திவாகர், கலையரசன் ஆகியோரில் ஒருவர் தான் வெளியேறுவார் என்று கூறப்பட்டது. ஆனால், பிரவீன் காந்தி வெளியேறி இருந்தார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளி வரும்போது பிரவீன் காந்தியிடம் போட்டியாளர்கள் பேசினார்கள். ஆனால், அவர் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்திவிட்டு வெளியே வந்தார்.

இரண்டாவது வாரம் எவிக்ஷன்:

இப்படி இருக்கும் நிலையில் இரண்டாவது வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றிருக்கிறது. இதில் அதிக பேர் நாமினேட் செய்தவர் போட்டியாளர் பார்வதி தான். அவரை அடுத்து கம்ருதினை தான் அதிகமாக நாமினேட் செய்திருக்கிறார்கள். அதற்குப்பின் அரோரா, எப்ஜே, அப்சரா, ரம்யா, சபரி, கெமி, வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் ஆகியோர் பெயர் இடம் பெற்றிருக்கிறது. இதில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேபோவது யார்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full