இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா? இரு குரூப்பில் இருந்து இரண்டு முக்கிய புள்ளி வெளியேற்றமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 41 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். மேலும், வைல்ட் கார்ட்டில் நான்கு போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் சென்றிருக்கிறார்கள். சீரியல் நடிகை திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள்.
பிக் பாஸ் 9:
இவர்கள் வீட்டுக்குள் சென்ற உடனே சரவெடியாக வெடித்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பு தொடங்கி இருக்கிறது. அதிலும் விஜே பார்வதி முகத்திரையை கிழித்திருக்கிறார்கள். ஐந்தாவது வாரத்தினுடைய கேப்டனாக திவ்யா கணேசன் தான் வெற்றி பெற்றிருந்தார். கடந்த வாரம் ஆஹா ஓட்டல் என்ற டாஸ்க் சென்றது. இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா, மஞ்சரி, தீபக் தான் சிறப்பு விருந்தினராக இந்த டாஸ்கில் கலந்து கொண்டு இருந்தார்கள்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
மேலும், கடந்த வாரம் முழுவதும் சிறப்பாக செய்த போட்டியளராக பார்வதி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
பின் வாரம் டபுள் எவிக்ஷன் என்பதால் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியிலிருந்து முதலில் துஷார் தான் வெளியே போனார். இதை அடுத்து யாரும் எதிர்பாராத விதமாக பிரவீன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். பின் ஆறாவது வாரத்திற்கான கேப்டன் டாஸ்க் நடந்தது. இதில் சபரி வெற்றி பெற்றார். பின் இந்த வாரம் மன்னர் ஆட்சி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
வெளியேறும் போட்டியாளர்:
மேலும், ஆறாவது வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. அதில், கனி, திவாகர், சாண்ட்ரா, திவ்யா, பார்வதி, வியானா, fj, அரோரா ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் கனி, சுபிக்ஷா, திவாகர், ரம்யா தான் குறைவான வாக்குகளை பெற்று வந்திருக்கிறார்கள். இதில் இந்த வாரம் கனி முதன்முறை நாமினேஷனிலேயே வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருந்தார் திவாகரும் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. யார் வெளியேற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.