சரவெடியாக நடந்த மூன்றாவது வாரம் நாமினேஷன் - யார் யார் தெரியுமா? லிஸ்ட் இதோ
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியின் மூன்றாவது வாரத்திற்கான நாமினேஷன் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 15 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.
இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. பின் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மூன்றே நாளில் போட்டியாளர் நந்தினி திடீர் என்று வெளியேற்றப்பட்டிருந்தார்.
பிக் பாஸ் 9:
உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நந்தினி வெளியேறினார். பின் முதல் வார எவிக்ஷனில் பிரவீன் காந்தி வெளியேறி இருந்தார். இதற்கிடையில் கேப்டன் டாஸ்க் நடைபெற்று இருந்தது. இதில் துஷார் தான் வெற்றி பெற்று வீட்டின் தலைவரானார். பின் பிக் பாஸ், இந்த சீசனில் டிசிபிலின் இல்லை என்று தல பதவியை பறித்தார். பின் நிகழ்ச்சியை சுவாரசியமாக்கும் வகையில் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
மேலும், இரண்டாவது வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. இதில் குறைவான வாக்குகளை அப்சரா தான் பெற்றிருந்தார். காரணம் இவர் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறார். அதனால் இவர் எலுமினேட் ஆனதாக கூறப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் மூன்றாவது வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றிருக்கிறது.
https://www.youtube.com/watch?v=Hxc-2I4Earo
நாமினேஷன் பட்டியல்:
இதில் அரோரா, துஷார், ஆதிரை, கானா வினோத், ரம்யா ஜோ, அகோரி கலையரசன், பிரவீன், சுபிக்ஷா, வியனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் யார் இந்த வாரம் வெளியேறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.