12 வது வாரத்தில் நடந்த நாமினேஷனில் யார்? யார் பெயரை சொல்லி இருக்காங்க பாருங்க
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 76 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.
இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, திவாகர், கலையரசன், பிரவீன், துஷார், கெமி, ப்ரஜன் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். மேலும், வைல்ட் கார்ட்டில் திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள்.
பிக் பாஸ் 9:
பத்தாவது வாரத்தில் நாமினேஷனில் முதலில் ரம்யா வெளியேறினார். பின் வியானா இரண்டாவதாக வெளியேறி இருந்தார். டபுள் எவிக்ஷன் நடந்தது. மேலும், இந்த வாரம் கானா வினோத் கேப்டன் டாஸ்கில் வென்று வீட்டு தல ஆகி இருக்கிறார். பின் 11வது வாரத்தில் நடந்த நாமினேஷனில் கானா வினோத், விக்ரம் தவிர சான்ட்ரா, fj, பார்வதி, கம்ருதீன், சபரி,அமித், திவ்யா, ஆதிரை, கனி, சுபிக்ஷா ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருந்தது.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு இரண்டு நபர்கள் வெளியேறி இருக்கிறார்கள். வாக்குகளின் கணக்கெடுப்பின்படி எப் ஜே மற்றும் ஆதிரை தான் குறைவான வாக்குகளை பெற்றிருந்தார்கள். இவர்கள் இருவரும் இந்த வாரம் வெளியேறி இருந்தார்கள். மேலும், இந்த 12 வது வாரத்தில் வீட்டு தலயாக கம்ருதீன் தேர்வாகியிருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=D1v4YK9DNHc
நாமினேஷன் லிஸ்ட்:
இந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்த பிரீஸ் டாஸ்க் நடக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த பன்னிரண்டாவது வாரத்தில் நாமினேட் ஆகிருக்கும் போட்டியாளர்கள் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், சபரி, கனி, சான்ட்ரா, சுபிக்ஷா, திவ்யா, பார்வதி, விக்ரம் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது. இதில் இந்த வாரம் யார் வெளியே போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.