கடுப்பில் ரம்யாவை வெளியே போக சொன்ன விஜய் சேதுபதி, கதவை திறந்த பிக் பாஸ் , அடுத்து என்ன?

By subhashini · 7/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 62 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, திவாகர், கலையரசன், பிரவீன், துஷார் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். மேலும், வைல்ட் கார்ட்டில் திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள்.

பிக் பாஸ் 9:

பின் கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று கெமி தான் வெளியேறி இருந்தார். நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து இருப்பதால் போட்டியாளர்கள் மத்தியில் ஆட்டம் சூடு பிடித்து இருக்கிறது. கடந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்றது. இதில் பிக் பாஸ் வீடு ஸ்கூலாக மாறி இருந்தது.கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பெரிதாக கலவரம் இல்லாமல் நிகழ்ச்சி நன்றாகவே சென்றது. அதோடு கடந்த வாரம் எவிக்ஷன் இல்லை. இந்த வாரம் கிளாசிக் சினிமா, மாடர்ன் சினிமா என்று இரு அணிகளாக பிரிக்கப்பட்டு அவர்கள் இருவருக்குமே ஒரு நெக்லஸ் கொடுக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

அந்த நெக்லஸை திருட போகாமல் பாதுகாப்பது தான் இந்த வார டாஸ்க். இதில் கிளாசிக் சினிமா அணியினர் ஏற்கனவே மாடர்ன் சினிமா இடம் இருந்து நெக்லஸை திருடி விட்டார்கள். அதை ப்ரஜன் திருடி ஒழித்து வைத்திருந்தார். அதேபோல் தங்கள் வசம் இருக்கும் நெக்லசை திருடு போகாமல் கிளாசிக் சினிமா பாதுகாத்து வந்தார்கள். இந்த டாஸ்க்கில் இரு அணிகளுக்கும் இடையே கடுமையாக வாக்குவாதம் மோதல்கள் நடந்தது. பிக் பாஸ் கொந்தளித்து எல்லோரையும் திட்டி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=GOZvbHiQdYU

ப்ரோமோ வீடியோ:

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் விஜய் சேதுபதி, விக்ரமை அங்கிருந்து எதுக்கு எழுப்பினீங்க? உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? என்று கேள்வி கேட்கிறார். அதற்கு ரம்யா, சீரியசாக எனக்கு தெரியாது சார் என்று சொல்கிறார். அதற்கு விஜய் சேதுபதி, நான் அப்சட்டா இருக்கேன். அதனால் இப்படித்தான் பேசவேண்டும் என்று பேசக்கூடாது. உங்களுக்கு பிடிக்கலைன்னா நீங்க வெளியே போலாம். உங்களை யாரும் கட்டாயப்படுத்த மாட்டோம் என்று சொல்கிறார். உடனே ரம்யா, எனக்கு தெரியாது சார். எல்லோரும் நான் பண்ணாத ஒரு விஷயத்தை சொல்லிக்கிட்டே இருக்கீங்க. இனிமேல் நான் இங்க இருக்க மாட்டேன். வீட்டுக்கு போறேன் சார் என்று சொல்கிறார். உடனே விஜய் சேதுபதி, நீங்கள் தாராளமாக வெளியே போகலாம் என்கிறார். பின் பிக் பாஸ் கதவையும் திறந்து வைக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full