அந்த விருதை தொட எனக்குத் தகுதியில்லையா? - பிக் பாஸ் மேடையில் திவ்யா கணேஷ் உருக்கம்

By subhashini · 19/1/2026

விஜய் டிவியில் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி சமீபத்தில் தான் கோலாகலமாக முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருந்தார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வந்தார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், வைல்ட் கார்ட்டில் திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள். இறுதியில் பிக் பாஸ் வீட்டில் வினோத், விக்ரம், சபரி, சான்ட்ரா, அரோரா, திவ்யா ஆகியோர் இருந்தார்கள். நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் உடைய கிராண்ட் பினாலே சுற்று நடைபெற்றது.

பிக் பாஸ் 9:

இதில் முதல் இடத்தை பிக் பாஸ் டைட்டில் பட்டத்தையும் திவ்யா கணேஷ் பெற்றிருக்கிறார். இதுவரை
டைட்டில் பெற்றதை மூன்றாவது முறையாக பெண் போட்டியாளர் பெற்று இருக்கிறார். இரண்டாவது இடத்தை சபரி பெற்றிருக்கிறார். மூன்றாவது இடத்தை விக்ரம், நான்காவது இடத்தை அரோரா பெற்றிருக்கிறார். மேலும், பட்டத்தை வென்ற பிறகு மேடையில் கண்கலங்கிய திவ்யா கணேஷ், நான் பல சேனல்களில் வேலை செய்திருக்கிறேன். பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.

பட்டம் வென்ற திவ்யா:

ஒவ்வொரு ஆண்டும் விருது விழாவிற்கு செல்லும்போது எனக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருப்பேன். விருது பட்டியலிலும் என்னுடைய பெயர் வரும். ஆனால், விருது கிடைக்காது. மேடைக்கும் செல்ல முடியாது. கைதட்டும் கூட்டத்தோடு கூட்டமாகவே பல ஆண்டுகள் கழிந்து விட்டது. மற்றவர்கள் விருது வாங்கி வைத்திருப்பதை பார்க்கும்போது அந்த டிராபியை ஒரு முறையாவது தொட்டு பார்க்க வேண்டும் என்ற ஆசையும் வரும்.

https://www.youtube.com/watch?v=sVo2eEddDxQ

திவ்யா சொன்னது:

எனக்கு என்ற ஒரு விருது வரும் போது தான் அதை தொட வேண்டும் என்று பிடிவாதத்தில் நான் அதை தொடவே இல்லை. பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு என்னுடைய வீட்டில் எல்லோருமே போக வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால், இது ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. கோப்பைக்காக நான் வரவில்லை. எனக்கென ஒரு தனி அடையாளத்தை பெற வந்தேன். பிக் பாஸ் வீட்டில் நான் நானாகவே இருந்தேன். என்னுடைய இயல்புக்கு கிடைத்த வெற்றியாக தான் இதை பார்க்கிறேன் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full