Dating சென்ற ஓவியா,ஆரவ்.! ஷாக் ஆன ரசிகர்கள்.! வைரல் புகைப்படம் உள்ளே!

By Ajju · 6/7/2018
விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி யாருக்கு பெரும் புகழையும் சம்பாதித்து தந்ததோ இல்லையோ, ஆரவிற்கும், நடிகை ஓவியாவிற்கும் பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. சொல்லப்போனால் ஆராவ், ஓவியாவை வைத்து தான் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் என்றும் கூறலாம். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் மற்றும் ஓவியா ஜோடி தான் பிக் பாஸ் வீட்டின் லைம் லைட்டாக இருந்து வந்தனர். அதிலும் குறிப்பாக நடிகை ஓவியாவுக்கு அவரது உண்மையான குணத்திற்காக பல ரசிகர்கள் அவருக்கு சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மியை கூட தொடங்கினர். சமீபத்தில் நடிகை ஓவியா பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஓவியாவிடம் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் 'உங்களையும் , ஆரவையும் மிஸ் செய்கிறேன் 'என்று குறிப்பிட்டிருந்தார். உடனே ஓவியா, ஆராவ்வுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். இதனால் இவர்கள் இருவரும் தற்போதும் காதலித்து வருக்கின்றனரா என்று அனைவருக்கும் எண்ணம் தோன்றியது. இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஓவியா ஆரவிடம் ஊர் சுற்றும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த அனைத்து ரசிகர்களும் தற்போது ஓவியா மற்றும் ஆரவவிற்கும் உண்டான காதலை ஊர்ஜிதபடுத்தியுள்ளனர். இந்த தகவல் ஓவியா அர்மியில் இருக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிடியாக அமைந்துள்ளது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னரும் நடிகை ஓவியா, ஆரவின் புகழை தான் பாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full