திருமணத்திற்கு பின்னர் தனது மனைவியுடன் ஆரவ் பதிவிட்ட முதல் புகைப்படம்.

By Rajkumar · 9/9/2020

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சீசன் ஆக இருந்து வருகிறது இந்த சீசனில் பங்குபெற்ற பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமாவில் நடிகர் நடிகைகளாக ஜொலித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ஆரவ்வும் ஒருவர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாகவே “ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆரவ்.

https://twitter.com/AaravNafeez/status/1303167001637126144

ஆரவ் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஓவியா இவர் மீது தீராத காதலில் இருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நடிகை ராஹி என்பவரை தான் ஆரவ் திருமணம் செய்து கொண்டுள்ளார் ஆரவ். நடிகை ராஹி, கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'இமை போல் காக்க' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகர் ஆரவ் மற்றும் ராஹியின் திருமணம் இன்று, செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது.

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சரண், ரஞ்சித் ஜெயக்கொடி, வருண், ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதே போல ஆரவ்வுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து பிந்து மாதவி, சக்தி, சினேகன், கணேஷ் வெங்கட் ராமன், ஆர்த்தி கணேஷ், காயத்ரி ரகுராம் சுஜா வருணி என்று பலர் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள். அதே போல பல்வேறு பிரபலங்களும் சமூக வலைத்தளத்தில் ஆரவ்விற்கு வாழ்த்துக்களை தெரிவித்துவந்தனர.

https://twitter.com/Karthik_kavin_/status/1303199117775044609

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது ஆரவ்வை உருகி உருகி காதலித்து வந்த ஓவியா திருமண நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் நடிகர் ஆரவ் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு 'இமைபோல் காப்பேன் ' என்று பதிவிட்டுள்ளார். தனது மனைவி நடித்த முதல் படத்தின் பெயரை பதிவிட்டு தனது மனைவியை கவர்ந்து உள்ளார் ஆரவ்

Tamil Behind Talkies AMP · Quick view
View full