முதல் வாரத்தில் அர்ச்சனாவிற்கு ஆதரவாக பதிவிட்ட டீவீட்டை நீக்கிய ஆரி - இது தான் காரணமா?

By Arun · 12/12/2023

அர்ச்சனா குறித்து போட்ட பதிவை ஆரி நீக்கி இருக்கிறார். தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 10 வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா, நிக்சன், சரவணா விக்ரம், மாயா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

இதுவரை எந்த சீசனிலும் இல்லாமல் இந்த சீசனில் தான் அதிகப்படியான Wild Card போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். அந்த வகையில் முதல் செட் Wild Cardல் தினேஷ், கானா பாலா, அன்ன பாரதி, பிராவோ, அர்ச்சனா ஆகியோர் உள்ளே வந்தனர். கானா பாலா, அன்ன பாரதி, பிராவோ ஆகிய மூன்று பேர் வெளியேறிவிட்டனர். இதில் தினேஷ் மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி வந்தனர்.

அர்ச்சனா உள்ளே வந்த முதல் வாரத்திலேயே இவருக்கும் Bully Gangற்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டு இருந்தது. வந்த முதல் வாரத்திலேயே மாயா, எப்படி அர்ச்சனாவை தெறிக்க விடுகிறேன் பார் என்று சொல்லி அவருக்கு வேலை மேல் வேலை வைத்துக் கொண்டே இருந்தார். இதனால் கோபத்தில் கொந்தளித்த அர்ச்சனா கடுமையாக பேசி மாயாவை வெளுத்து வாங்கி இருந்தார். மேலும், ஒட்டு மொத்த Bully Gangயும் சமாளித்தார் அர்ச்சனா.

https://twitter.com/Onion955/status/1733852692035026967

இதனால் அர்ச்சனாவிற்கு சமூக வலைதளத்தில் ஆதரவு குவிந்தது. அந்த வகையில் முன்னாள் சீசன் டைட்டில் வின்னர் ஆரி கூட அர்ச்சனாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் நீங்கள் இப்பதான் விளையாட ஆரம்பித்திருக்கிறீர்கள். தைரியமாக விளையாடுங்கள் என்று கூறி குறிப்பிட்டு இருந்தார். ஆரியின் இந்த பதிவால் அர்ச்சனாவிற்கு மேலும் ஆதரவு கூடியது.

ஏனேனில் ஆரிக்கு எந்த அளவிற்கும் பிக் பாஸ் மூலம் ரசிகர்கள் கிடைத்தார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். எனவே, ஆரியே அர்ச்சனாவிற்கு ஆதரவு தெரிவித்துவிட்டார் என்று பலரும் கூறி வந்த நிலையில் தற்போது அர்ச்சனா குறித்து போட்ட அந்த பதிவை ஆரி தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கி இருக்கிறார். அதற்கு முக்கிய காரணமே கடந்த வாரம் அர்ச்சனா விளையாடிய விதம் தான்.

https://twitter.com/meghs997/status/1733964783454691366

முதல் வாரத்தில் அர்ச்சனாவிற்கு இருந்த ஆதரவு நாட்கள் செல்ல செல்ல படிப்படியாக குறைந்து வருகிறது. அதிலும் கடந்த வாரம் இவர் செய்த பல்வேறு விஷயங்கள் இவர் எடுத்திருந்த நற்பெயரை குறைத்து விட்டது என்று சொல்லலாம். இதனால்தான் கமல் கூட கடந்த வாரம் இவரை கடுமையாக பேசி இருந்தார். இவரது நடவடிக்கைகளால் இவருக்கு சமூக வலைதளங்களில் டிராமாகுவின், பிரச்சனா என்று பல பல பட்டப் பெயர்களும் உருவாகியிருக்கிறது. இதன் காரணமாகவே அர்ச்சனா குறித்த பதிவை நீக்கி இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full