ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அவர் பண்ண விஷ்யத்த பாத்து ச்சீனு ஆகிடிச்சி. ஆரி குறித்து டேனியல் சொன்ன ரகசியம்.

By Rajkumar · 26/10/2020

தமிழ் சினிமா உலகில் முன்னணி வளர்ந்து வருபவர் நடிகர் ஆரி. இவர் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான 'ரெட்டைசுழி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நடிகராக அறிமுகமானர். இதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு கிருஷ்ணா இயக்கத்தில் நெடுஞ்சாலை என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் தான் நடிகர் ஆரி மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். இதனைத் தொடர்ந்து மாலை பொழுதின் மயக்கத்திலே, மாயா, உன்னோடு கா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

நடிகர் ஆரி அவர்கள் சினிமா தவிர சென்னை வெள்ளம்,ஜல்லிக்கட்டு பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை போன்ற அனைத்து சமுதாய பிரச்சனைக்கும் முன்னின்று குரல் கொடுத்தவர்.அதுமட்டும் இல்லாமல் இவர் கடந்த சில ஆண்டுகளாக மாறுவோம் மாற்றுவோம் என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி வருகிறார். அந்த அறக்கட்டளையில் விவசாயம் குறித்த விழிப்புணர்வுகளை மேற் கொண்டு வருகிறார் ஆரி. இதற்காக நடிகர் ஆரி அவர்கள் கின்னஸ் புத்தகத்தில் கூட இடம் பிடித்தார். பிக் பாஸில் கடந்து வந்த பாதை டாஸ்கின் போது ஆரி பேசிய போது, தனது வீட்டில் அனைவருமே படித்து ஓரளவிற்கு செட்டில் ஆகி விட்டார்கள் ஆனால் நான்தான் படிப்பு வராமல் அப்படியே சுற்றிக்கொண்டு கொண்டு இருந்தேன்.

அப்போது எனது தந்தை எனது சிறு பகுதியை விற்று ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து என்னை சென்னைக்கு வழி அனுப்பி வைத்தார்.அதன் பின்னர் சென்னையில் ஒரு மஞ்சப் பையோடு வந்து இறங்கிய நான் பின்னர் சினிமாவில் எப்படியோ வாய்ப்பைத் தேடி அலைந்து கொண்டிருந்த சமயத்தில் சேரன் மூலமாக எனக்கு பட வாய்ப்பு வந்திருந்தது அந்த படத்தின் பெயர் 'ஆடும் கூத்து' அந்த படம் சிறந்த தமிழ் மொழிக்கான தேசிய விருதை பெற்றது. ஆனால் அந்த படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. என்னுடைய முதல் படமே திரையரங்கில் வெளி வராமல் போனது மிகவும் வருத்தமான விஷயம் என்று கூறியிருந்தார் ஆரி.

வீடியோவில் 17 : 38 நிமிடத்தில் பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=UCWPu8p-AxM&feature=youtu.be

ஆரியை பற்றி இப்படி பல நல்ல விஷயங்கள் இருக்கும் நிலையில், நடிகர் ஆரி ஜல்லிகட்டு போராட்டத்தின் போது செய்த செயல் குறித்து நடிகர் டேனியல் குறிப்பிட்டுள்ளார். நடிகர் டேனியும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பல உதவிகளை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பேட்டியில் பேசியுள்ள டேனியல், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அவருடன் நான் ஏழு நாள் பட இருந்தேன் அப்போது அவர் என்னிடம் யார் வந்து அழைத்தாலும் யாரும் மீடியா பக்கம் போகாதீர்கள் அவர்கள் நம்மிடம் தேவையில்லாமல் வார்த்தைகளை பிடுங்குவார்கள் என்று சொன்னார் இதனால் நானும் மீடியாவிடம் பேசவில்லை.

என்னை இப்படி சொல்லிவிட்டு அவர் ஒருபுறம் கையில் பத்து மைக்கை பிடித்து கொண்டு பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார். இதனால் நம்மளை தட்டிவிட்டு அவர் ஏதாவது பெயர் எடுக்க பார்க்கிறாரா, ச்சீ, என்னடா இப்படி பண்ணி விட்டார் என்று யோசித்தேன். அதன் பின்னர் அவரிடம் , எங்களை மீடியாவிடம் பேச வேண்டாம் என்று கூறிவிட்டு நீங்கள் பேசி விட்டீர்களே என்று சொன்னதற்கு, யாராவது ஒருவர் வழிநடத்திச் செல்ல வேண்டும் இல்லையா என்று சொன்னார், அவர் சொன்ன காரணம் எனக்கு ஏற்றுக்கொள்ளும்படி என்பதால் இந்த விஷயத்தை நான் அப்படியே விட்டு விட்டேன் என்று கூறியுள்ளார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full