தமிழகத்தில் வருகின்ற 2021-ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் தமிழகம் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்த தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம், ரஜினியின் புதிய கட்சி என தேர்தல் களம் காணவுள்ளனர். சமீபத்தில் தேர்தலுக்கான கட்சி சின்னங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நடிகர் கமலின் மக்கள் நீதி மையத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டவில்லை. ஆனால், புதுச்சேரியில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரு நிலையில் நடிகரும் மக்கள் நீதி மைய தலைவருமான நடிகர் கமலஹாசன் 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கான பிரச்சாரத்தை கடந்த 3 தினங்களாக தொடர்ந்து வருகிறார். இதற்காக மதுரை, தேனி, விருதுநகர், திருவண்ணாமலை, விழுப்புரம் என்று பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல் பிரச்சாரம் மேற்கொண்டும் வருகிறார். மேலும், செல்லும் இடமெல்லாம் தனக்கு மக்களின் ஆதரவு இருப்பாதகவும் கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : Ticket To Finale ஏழாம் டாஸ்க் Tie-ல் முடிந்த முதல் இடத்திற்கான போட்டி. யார் யார் தெரியுமா ?

Advertisement

நடிகர் கமல் பிரச்சாரத்துக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டத்தில் இருந்து பிக் பாஸ் பற்றிய கேள்விகள் வந்துகொண்டு இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட பிரச்சாரத்திற்கு சென்ற கமலிடம் மக்கள் கூட்டத்தில் இருந்து ஒருவர் ”அனிதா சம்பத் போவாளா எப்படி’ என்று கேட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. அந்த வாரம் அனிதா சம்பத் வெளியேறியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பிரச்சாரத்திற்கு சென்ற கமலிடம் மக்கள் கூட்டத்தில் இருந்து சிலர், ஆரி, ஆரி என்று கோஷமிட்டதால் கமல் சற்று நேரம் பேச்சை நிறுத்தி எண்னென்று கேட்ட போது பிக் பாஸ் என்று கோஷமிட்டுள்ளனர். அதன் பின்னர் தனது பேச்சை மீண்டும் துவங்கினர் கமல். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இதன் மூலம் ஆரிக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்று தெளிவாக தெரிகிறது.

Advertisement
Advertisement