பாவனி அவ்வளவு செய்தும் நேற்று பஸ் டாஸ்கில் அபிநய் செய்துள்ள செயல் - போட்டு கொடுத்த நிரூப். முழித்த அபிநய்.

By Arun · 15/12/2021

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக ஏதாவது ஒரு காதல் கதை உருவாகிவிடும். ஆனால், இந்த சீசனில் இருக்கும் பலர் திருமணமானவர்கள் என்பதால் அப்படி எதுவும் பெரிதாக இதுவரை வரவில்லை. இருப்பினும் வருண் - அக்ஷரா ஆகிய இருவர் பற்றி முடிச்சுப் போட்டு பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், அவர்கள் இருவரும் தாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் தான் என்று கூறி வருகின்றனர். இவர்கள் இருவரையும் தாண்டி பிக் பாஸ் வீட்டில் அதிகம் கிசுகிசுக்கப்பட்டு வருவது அபிநய் மற்றும் பவானி உறவுதான் .

https://twitter.com/Akash272003/status/1470952977162776578

அதிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்க்கின் போது ராஜு, அபிநய்யிடம் பவானியை லவ் பண்றீங்களா என்று கேட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது. பாவனி விவகாரம் தான் கடந்த சில நாட்களாக பிக் பாஸ் வீட்டில் பேசு பொருளாக இருந்து வருகிறது . இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாவனி, அபிநய்யை பற்றி பேசியதை குறும்படம் போட்டு காண்பித்து பாவனியின் முகத்திரையை கிழித்தார் கமல்.

இவர்கள் இருவருக்கும் இருக்கும் உறவு குறித்து கிசுகிசுகிளம்புவதற்கு முதல் காரணமே இவர்கள் இருவரும் தான். இருப்பினும் அபிநய் தான் தன்னிடம் பின்னாலே வந்து பேசுகிறார். அவருக்கு என் மீது ஒரு பீலிங்ஸ் இருப்பது உண்மை தான் ஆனாலும், அவரிடம் என்னிடம் பேச வேண்டாம் என்று என்னால் நேரடியாக சொல்ல முடியவில்லை என்று கூறி இருந்தார் பாவனி.

https://twitter.com/_raja/status/1470251371844620288

கடந்த சில நாட்களாகவே பாவனி மற்றும் அபிநய் இருவரும் பேசுவது இல்லை. ஆனாலும், பாவனி மீது தன் பாசத்தை புழிந்து வருகிறார் அபிநய். அதிலும் அமீரிடம் சென்று பாவனியை நன்றாக பார்த்துக்கொள் என்று கூட சொல்லி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நேற்றய பஸ் டாஸ்கில் பாவனி நின்று இருந்தால் நானும் நின்று இருப்பேன் என்று அபிநய் கூறியதாக நிரூப் பாவனியிடம் கூறினார்.

https://twitter.com/_raja/status/1470339274448855040

ஆனால், பாவனி அதனை கண்டுகொள்ளவே இல்லை. அப்போதும் அருகில் இருந்த அபிநய், நிரூப்பிடம் என்ன என்று கேட்க 'நீ அப்போ சொல்லவே இல்லையா' என்று நிரூப் கேட்டதற்கு ஒன்றும் பேசாமலே இருந்தார் அபிநய். பாவனி இவ்வளவு அசிங்கப்படுத்தியும் மீண்டும் மீண்டும் அபிநய் இப்படி நடந்துகொள்வதை என்னவென்று சொல்வது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full