மதுமிதாவிற்கு நடந்தது என்ன.! முதன் முறையாக விளக்கமளித்த அபிராமி.!

By Rajkumar · 20/8/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சனிக்கிழமை மதுமிதா வெளியேற்றப்பட்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களாக மதுமிதா மற்றும் ஆண்கள் அணிக்கும் பிரச்சனை ஓடியது. இந்த நிலையில் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா தன்னை காயப்படுத்தியதற்கு முக்கிய காரணமே இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஹெலோ டாஸ்கின் போது ஏற்பட்ட பிரச்சனை தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மேலும், மதுமிதாவின் இந்த தற்கொலை முயற்சிக்கு காரணம் ஆண்கள் தான் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இதையும் பாருங்க : மனைவியின் பிகினி புகைப்படட்திற்கு கோலி அடித்த கமன்ட்.! முகம் சுழித்த ரசிகர்கள்.! 

அதே போல மதுமிதாவிற்கும் சாண்டி கேங்கிற்கும் சண்டை வந்ததற்கு முக்கிய காரணமே அபிராமி தான். அபிராமியை சிறையில் போட்டதற்காக தான் மதுமிதா ஆண்களிடம் சண்டை போட்டார். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் மதுமிதா உங்களுக்காக தான் பேசினார். ஆனால், அவருக்காக நீங்கள் துணை நிற்கவில்லை என்று கேட்டுள்ளார்.

இதற்கு விளக்கமளித்துள்ள அபிராமி, நாங்கள் மதுவை எந்தவிதத்திலும் காயப்படுத்தவில்லை அவர் ஒரு இனிமையான குழந்தை கண நேரத்தில் அவர் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டார் எதுவும் தெரியாமல் கமெண்ட் செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார் அபிராமி மேலும் நான்தான் சேரன் மற்றும் கஸ்தூரியுடன் அவரை கனபெஷன் ரூமுக்கு அனுப்பி வைத்தேன் இங்கே அனைத்தையும் கூறுவதற்கு நான் இல்லை. இது மிகவும் சர்ச்சையான விஷயம் இதை பற்றி யாரும் பேச வேண்டாம் போது முதலில் ஓய்வெடுத்து விட்டு மீண்டு வரட்டும் என்று கூறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full