பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் அபிராமி பதிவிட்ட முதல் ஸ்டேட்டஸ்.!

By ·

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து 2 போட்டியாளர்கள் வெளியேற்றபட்டுள்ளனர். கடந்த வாரம் சரவணன் சாக்க்ஷி வெளியேற்றப்பட்ட நிலையில் சமீபத்தில் மதுமிதா மற்றும் அபிராமி வெளியேற்றப்பட்டனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களும் தற்போது குறைந்துள்ளனர். 

பிக் பாஸ் வீட்டின் ஆரம்பத்தில் இருந்தே அபிராமி மீது கொஞ்சம் வெறுப்பான தோற்றமே இருந்து வந்தது. ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்த அபிராமி அதன் பின்னர், முகெனை காதலித்து வந்தார். அதன் பின்னர் அவரிடமும் சண்டைபோட்டுக் கொண்டு பிரிந்துவிட்டார்.

இதையும் பாருங்க : தொடங்கியது இந்த வார நாமினேஷன்.!சேரனை நாமினேட் செய்த லாஸ்லியா.! 

கடந்த வாரம் மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் எலிமினேஷன் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற ஓட்டிங்கில் குறைவான வாக்குகள் பெற்ற அபிராமி நேற்றய நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறிய அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், வந்துவிட்டேன் பாரதி கண்ட புதிய பெண்ணாக நேர்கொண்ட பார்வையுடன். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full