ஹம், அபிராமிக்கு காதலனே இருக்காரு போல.! அப்புறம் ஏன் முகென் கிட்ட இப்படியெல்லாம்.!

By Rajkumar · 6/8/2019

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு காதல் கதைகள் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்த அபிராமி தற்போது முகெனை காதலித்து வருகிறார். மேலும், முகென் மீது அதிக அன்பை வைத்துள்ள அபிராமி எப்போதும் அவர் பின்னாலேயே அலைந்து கொண்டு வருகிறார்.

நேற்றய நிகழ்ச்சியில் கூட சாக்க்ஷி மற்றும் அபிராமிக்கு பிரச்சனை வந்தது. இதனால் முகென் கட்டிலை எல்லாம் உடைத்தார். பின்னர் இருவரும் தனியாக அபிராமியிடம் பேசிய முகென், எனக்கு நீ என் மீது போசசீவ் ஆகுவது எனக்கு தெரிகிறது. ஆனால், நீ என் காதலி கிடையாது எனவே, நீ என் மீது போசசீவ் ஆகிவிடாதே. நான் உனக்கு நல்ல நண்பராக இருக்கிறார் என்று தான் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அபிராமி ஒரு ஆணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு புகைப்படத்தில் அந்த நபருடன் நெருக்கமாக இருக்கும் அபிராமி' நீ என்னுடையவன்' என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு புகைப்படத்தில், பேபி என்றும் குறிப்பிடத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது, இது தான் அபிராமியின் காதலரா என்று எண்ணம் தோன்றுகிறது. அதே போல இந்த இரண்டு புகைப்படத்தையும் அபிராமி பதிவிட்டாரா இல்லை அந்த நபர் பதிவிட்டாரா என்பது தான் தெரியவில்லை. ஆனால், இந்த புகைப்படங்கள் அபிராமியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இல்லை.

behindtalkies AMP · Quick view
View full