யாரும் ஆன்மீக பாடம் எடுக்க வேண்டாம் - நடராஜர் டாட்டூவை முதுகில் குத்தியதற்க்கு அபிராமி விளக்கம்.

By Manikandan · 20/2/2023

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "லியோ" படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், புரியுமா ஆனந்த், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். மேலும் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. அதோடு இப்படத்தில் விக்ரம் பட நடிகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் "லியோ" படத்தில் அதிரடியாக சமீபத்தில் இணைந்தவர் பிக் பாஸ் பிரபலம் அபிராமி வெங்கடாச்சலம். இவர் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை உறுதிப்ப்டுத்தும் வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டார், இந்த புகைப்படம் வைரலாக நிலையில் தற்போது அபிராமி தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் போட்டுள்ள பதிவு மீடியாவில் நெட்சன்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

சினிமாத்துறையில் பிரபல நடிகைகள் தங்களுடைய சினிமா மார்க்கெட்டை தக்கவைத்து கொள்ள தொடர்ந்து போட்டோ ஷாட்களை நடந்தி தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருவார்கள். அந்த வகையில் பிக் பாஸ் அபிராமி வெங்கடேஷை எடுத்துக் கொண்டால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது கவினுடன் காதல் என்ற டிராமா ஆடினார். அதற்கு பிறகு வெளியில் வந்து பிக் பாஸ் சீசன்3ல் தன்னுடன் விளையாடிய சக போட்டியாளர்களின் வீட்டிற்கு சென்று நட்பு பாராட்டினார்.

அதற்கு பிறகு அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் சில படங்களிலும் நடித்து விட்டார். மேலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அபிராமி தொடந்து தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தன்னை பற்றி பேச வைத்து கொண்டே இருக்கிறார். அதோடு கடந்த மகா சிவராத்திரி தினத்தில் காளஹஸ்தி தெருவில் சரியான நடனமாடி அந்த விடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில் அது வைரலானது.

இந்நிலையில் தான் தற்போது மீண்டும் ஒரு இன்ஸ்டா பதிவை போட்டுள்ளார் அபிராமி. அவர் போட்டுள்ள பதிவில் தன்னுடைய முதுகில் நடராஜர் உருவத்தை டாட்டூவாக குத்தி தன்னுடைய ஆன்மீக ஈடுபாட்டை காட்டியுள்ளார். மேலும் அவர் பதிவிட்ட புகைப்படத்தின் கீழ் ஒரு வாசகத்தையும் கூறியுள்ளார்.

View this post on Instagram

A post shared by Abhirami Venkatachalam 🦋 (@abhirami.venkatachalam)

அதில் "பக்தி குறித்து யாரும் எனக்கு சொல்லித்தர வேண்டாம், என்னுடைய சிவனை நான் எங்கே வேண்டுமானாலும் டாட்டூவாக வைப்பேன். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம் என்று பதிவிட்டுள்ளார். அதிலிருந்து விலகியிருங்கள் என்று பதிவிட்டுள்ளார். அதோடு சிவபெருமானின் பாடலையும் அந்த பதிவில் சேர்த்துள்ளார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி நெட்டிசன்கள் கடுமையாக அபிராமியை திட்டி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full