நம்மல Entertain செய்ய, விஜய் ஒரு வருசத்துல இத்தனை நாள் வேல செய்றாரு, அளந்துவிட்ட அபிஷேக், கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.
தமிழ் சினிமா உலகில் ரஜினிகாந்த், கமலுக்கு அடுத்தபடியாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய படத்தை இயக்குவதற்காக பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வரிசையில் காத்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. கடைசியாக விஜய் நடித்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
விரைவில் வெளியாக இருக்கும் பீஸ்ட் :
பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். ட்ரெய்லரில் ஒரு மால்லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். எதர்ச்சையாக கடத்தப்படும் மால் ஒன்றில் விஜயும் சிக்கிக் கொள்கிறார்.
விஜய் மால்லையும், மக்களையும் எப்படி காப்பாற்றினார்? இதன் பின்னணி என்ன? என்பது தான் சுவாரஸ்யமே என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் அவர்களின் அடுத்த படத்துக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.விஜய்யின் 'தளபதி 66' படத்தை வம்சி பைடிபள்ளி இயக்க இருக்கிறார் . இவர் தமிழில் ஏற்கனவே கார்த்தி, நாகர்ஜுனா நடித்த தோழா படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் குறித்து அபிஷேக் :
மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதுமட்டுமில்லாமல் இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணிபுரிந்து இருக்கிறார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை நடைபெற்று இருந்தது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் போட்டியாளரும் யூடுயூப் விமர்சக்கரமான அபிஷேக் விஜய் குறித்து பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.
கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் :
அதில், இப்படிப்பட்டவர்களின் வாழ்வில் எவ்வளவு திட்டமிடல் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா?விஜய் நம்மை மகிழ்விப்பதற்காக வருடத்தில் 250 நாட்கள் வேலை செய்கிறார் என்று பதிவிட்டு இருந்தார். அபிஷேக்கின் இந்த பதிவை ரசிகர்கள் பலரும் கலாய்த்து தள்ளி வருகின்றனர். அதிலும் ஒரு சிலர், அவர் பல கோடிகளை சம்பாதிக்கிறார். பெரும்பாலான மக்கள் குடும்பத்தை காப்பாற்ற 300 நாளைக்கு மேல் வேலை செய்கிறார்கள் என்று கலாய்த்து தள்ளி வருகின்றனர்.