உடல் எடை குறைத்து படு ஸ்லிம்மாக மாறிய காஜல் - வேற லெவல் Transformation தான்.

By Rajkumar · 10/4/2021

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை காஜல்முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில்தான். இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார். மேலும், சிங்கம். கோ. மௌனகுரு. கௌரவம். இரும்பு குதிரை கலகலப்பு2 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காஜல் பசுபதி.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆனால் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் விவாகரத்திற்கு பின்னரும் சாண்டியுடன் ஒரு நல்ல தோழியாக இருந்து வருகிறார் நடிகை காஜல். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற காஜல். சாண்டியின் பிரிவு குறித்து பேசுகையில் 'நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவரை காதலித்து முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டோம்.

எங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் விருப்பம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் அவர்களிடம் மறைத்து தனியாக வாழ்ந்து வந்தோம். ஆனால், அதனை லிவிங் டு முறையில் வாழ்வதாக கூறிவிட்டார்கள்.சாண்டி என்னை பிரிவதற்கு நான் தான் முக்கிய காரணம். சாண்டியின் மீது அதிகப்படியான பாசத்தினால் அவரை நான் மிகவும் கஷ்டப்படுத்தி இருக்கிறேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு நாங்கள் பிரிந்து விட்டோம்.

ஆனால், தற்போது சாண்டி மற்றும் அவரது மனைவியுடன் நல்ல உறவில் இருந்து வருகிறேன் என்று கூறி இருந்தார்.இந்த நிலையில் நடிகை காஜல் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார், அதில் முன்பை விட படு ஸ்லிம்மாக மாறி இருப்பதை கண்ட ரசிகர்கள் ' யப்பா ...யார்ரா இந்த பொண்ணு ' என்று வாயை பிளந்துள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full