ஐஸ்வர்யா, சம்யுக்தாவிற்கு ஆதரவாக ட்வீட் போட்டார்னு பாத்தா கடைசில இதான் விஷயமா.

By Rajkumar · 6/11/2020

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் சம்யுக்தா குறித்து ட்வீட் போட்டுள்ளார் நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான ஐஸ்வர்யா. தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். ரியோ, ரேகா, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ்,ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், வேல்முருகன் என்று பல பரிட்சயமான போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் ஒரு சில புது முகங்கள் கூட கலந்து கொண்டு இருந்தனர்.அந்த வகையில் சம்யுக்தாவும் ஒருவர்.

https://twitter.com/NAVEEN24981112/status/1324684369642942464

இன்ஜினியரிங் முடித்துவிட்டு கார்ப்பரேட்டில் பணியாற்றி இவர் மாடல் அழகியும் ஆவார். மேலும், இவர் மிஸ் சென்னை பட்டத்தை கூட ஜெயித்திருக்கிறார். மாடலிங் நடனம் போன்ற பல்வேறு விஷயங்களில் ஈர்ப்பு கொண்ட இவருக்கு 4 வயதில் ஒரு மகனும் இருக்கிறார். மேலும், இவர் விஜய் டிவி தொகுப்பாளினியான பாவனாவின் நெருங்கிய தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது. சொல்லப்போனால் பாவனாவின் ரெகமெண்டேஷன் மூலமாகத்தான் இவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் ஆரம்பித்த ஒரு சில நாட்களில் இவருக்கு என்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் சேர ஆரம்பித்தது ஆனால் கடந்த சில தினங்களாக இவரது செயல்பாட்டினால் ரசிகர்கள் இவர் மீது கொஞ்சம் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணமே இவரும் ஆரி சொன்ன அந்த குரூபீசம் குட்டையில் தான் இருக்கிறார். நேற்றைய நிகழ்ச்சியில் கூட நீதிமன்ற டாஸ்கின் போது இவர் ஆரியை குற்றம்சாட்டி சில கருத்துக்களை கூறி இருந்தார். அப்போது நடைபெற்ற விவாதத்தில் இவருக்கும் ஆரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அமைதியாக இருந்துவிட்டு பின்னர் வெளியில் வந்தவுடன் பெண்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாதவன் எல்லாம் பிக்பாஸ் இருக்கு வந்துவிட்டான் என்று ஆரியை மரியாதை குறைவாக பேசி இருந்தார்.

இப்படி இருக்க இவருக்கு ஆதரவாக நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் மான ஐஸ்வர்யா தத்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் சிலர், உன்ன மாறி ஒரு லூசுதான் அதுவும் என்று தலையில் அடித்துக்கொண்டு கமன்ட் செய்துள்ளனர். ஆனால், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா என்று குறிப்பிட்டது மிஸ் இந்திய அழகியான மனுஷா சம்யுக்தாவை தான். அதாவது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள மிஸ் இந்தியா திரைப்படம் மிஸ் இந்திய அழகியான மனுஷா சம்யுக்தாவின் வாழ்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். அதை குறிப்பிட்டு தான் ஐஸ்வர்யா தத்தா இந்த பதிவை போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full