கோடி கணக்கில் பண மோசடி செய்த ஐஸ்வர்யா காதலர் கைது.! ஐஸ்வர்யாவுக்கும் தொடர்பு.!

By Rajkumar · 16/3/2019

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ஐஸ்வர்யா, பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் ஐஸ்வர்யாவை `ஏஞ்சல்’ என அழைத்த கோபி யார். அவரைச் சுற்றி இருக்கும் சர்ச்சைகள் இவை. அவர் தான் ஐஸ்வர்யாவின் காதலர் என்றும் கூறப்படுகிறது. இவ்ருடைய பெயரை தான் ஐஸ்வர்யா தனது விரலில் கூட பச்சை குத்தியுள்ளார். அவர் பல மோசடி செயல்களிலும் ஈடுபட்டுள்ளார்.

கோபி, 2016-ல் சென்னை போலீஸால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்தவர். நிதி நிறுவனம் நடத்தி, குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கித் தருவதாக நூற்றுக்கணக்கானவர்களிடம் பல கோடி ரூபாயைச் சுருட்டியதாகக் கைது செய்யப்பட்டார். கோடிக்கணக்கில் பொதுமக்களின் பணத்தைச் சுருட்டிய குற்றச்சாட்டில் கைதாகி, சிறையில் இருந்துவிட்டு, வெளியில் வந்திருக்கிற, பணத்தை இழந்த பலரும் இன்றும் தேடிக்கொண்டிருக்கிற கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கைதாகியுள்ளார் கோபி.

கோபி கிருஷ்ணன் சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறார். அப்போ அறிமுகமானவங்கதான், ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா பிக் பாஸ் ஷோவுக்குள் வந்ததிலும் கோபிக்குப் பங்கு இருக்கலாம். அவரை இந்த நிகழ்ச்சிக்கு அனுப்புவதன் மூலம் கிடைக்கும் புகழை வைத்து, வெளிநாட்டில் கலை நிகழ்ச்சிகள் நடத்திப் பணம் பார்க்கத் திட்டமிட்டிருந்தா சொல்றாங்க. அதேபோல, இந்த சீஸன்ல அடம்பிடிச்சு ஷோவுக்குள் போன ஒரே ஆள், ஐஸ்வர்யாதான்.

முதல் சீஸன் முடிஞ்சதுல இருந்தே 2-வது சீஸன்ல கலந்துக்கணும்னு பல வழிகள்ல முயற்சி பண்ணியிருக்காங்க, ஐஸ்வர்யா. ‘தமிழ் சரியா பேசத் தெரியல’, ‘இன்னும் கொஞ்சம் பிரபலமான பிறகு சேர்த்துக்கிறோம்’ எனப் பல காரணங்களைச் சொல்லி சேனல் நிர்வாகம் இவரை முதலில் ஏற்கவில்லை. ஆனா, ஏதோ ஒரு வழியில இந்த நிகழ்ச்சிக்குள்ள வந்துட்டாங்க ஐஸ்வர்யா” என்கிறார்கள்.

இந்த விவகாரங்களை அறிந்த சிலர். பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலக வட்டாரத்தில் பேசியபோது, “பண மோசடி வழக்கு விசாரணை என்பது பெரிய பிராஸஸ். எத்தனையோ வழக்குகளில் ஏமாத்திட்டு தலைமறைவானவங்க இன்னும் பிடிபடல. அதுக்காக, அந்த வழக்கை அப்படியே விட்டிருப்பாங்கனு யாரும் நினைக்கத் தேவையில்லை. எல்லா வழக்குகளும் முறைப்படி விசாரிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.” என்கிறார்கள். எனவே, இந்த விசாரணையில் ஐஸ்வர்யாவிற்கும் தொடர்பு இருந்தால் அவரும் கைது செய்யபடுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full