அறைகுறை பனியனில் பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட புகைப்படம்.!

By Rajkumar · 14/1/2019

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளர்களாக களமிறங்கிய ஐஸ்வர்யா தத்தா தற்போது மஹத் நடித்து வரும் 'கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா ' என்ற புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்கள்.

மேற்கு வங்காளத்தில் இருந்து வந்த ஐஸ்வர்யா தத்தா ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவரின் அடுத்த படத்திற்கு வழிவகுத்துள்ளது. இந்தப் படத்தை பிரபு ராம் சி இயக்குகிறார்.

இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே இவர் ஓரினச்சேர்க்கையாளராக நடித்திருந்த ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அம்மணி சமீபத்தில் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பிடிக்க தான் ஐஸ்வர்யா இதுபோன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full