கடந்த 11ஆம் தேதி பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் தற்போது திடீர் இறப்பு - அக்ஷரா வீட்டில் நேர்ந்த பேரிழப்பு.

By subhashini · 31/10/2023

பிக் பாஸ் அக்ஷரா ரெட்டி வீட்டில் நடந்திருக்கும் சோக சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றிருப்பது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசன்களை கடந்து தற்போது ஏழாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல பேர் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் அவர்களுக்கு சினிமாவிலும் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் அக்சரா ரெட்டி. இவர் மாடல் அழகி ஆவார். இவர் பல விளம்பரங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் அழகி போட்டியில் கூட கலந்து பட்டத்தை வென்று இருந்தார்.

அக்ஷரா குறித்த தகவல்:

இருந்தாலும், இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் இவர் ஆரம்பத்திலிருந்து நன்றாக தான் விளையாடி வந்தார். குறிப்பாக, நிகழ்ச்சியில் அக்ஷரா- வருண் இருவருமே நல்ல நண்பர்களாக நல்ல புரிதலுடன் கடைசி வரை விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதனால இவர்களுக்கு ஒரு தனி ஆர்மி உருவாகி இருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் அக்ஷரா என்பது நாட்கள் வரை இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அக்ஷரா:

பின் குறைந்த வாக்குகள் அடிப்படையில் திடீரென்று அக்ஷரா- வருண் இருவரும் ஒன்றாகவே வெளியேற்றப்பட்டிருந்தார்கள். இது பலருக்குமே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அது மட்டும் இல்லாமல் சோசியல் மீடியாவில் கூட இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் சர்ச்சைகள் கிளம்பி இருந்தது. ஆனால், இருவரும் நல்ல நண்பர்கள் தான் என்று விளக்கம் கொடுத்திருந்தார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகும் அக்ஷரா-வருண் இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாக பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்கள்.

அக்ஷரா பட வாய்ப்பு:

அதோடு இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய திரைப்பட வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அதுவும் இருவரும் சேர்ந்து ஒன்றாக ஒரே படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பயங்கர குஷியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அக்ஷரா வீட்டில் நடந்திருக்கும் துக்க சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அக்ஷராவின் தந்தை சுதாகர் ரெட்டி. இவர் மெட்ராஸ் ஐஐடியில் படித்து தங்கம் வென்றவர்.

View this post on Instagram

A post shared by MUTHUPANDI 😎 (@muthupandi_uhtum)

அக்ஷரா அம்மா இறப்பு:

இவர் தொழிலதிபராக இருந்தவர். இவர் இறந்துவிட்டார் என்று அக்ஷராவே நிகழ்ச்சியில் கூறி இருந்தார். பின் அக்ஷரா தன்னுடைய அம்மா மற்றும் அண்ணனுடன் தான் வசித்து வந்தார். தற்போது அக்ஷராவின் அம்மா தான் உடல் நல குறைவால் இறந்திருக்கிறார். கடந்த அக்டோபர் 11ம் தேதி அவருடைய அம்மாவின் பிறந்தநாளை அக்சரா பிரம்மாண்டமாக கொண்டாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அக்சரா அம்மா இறப்பு இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலரும் அக்சராவிற்கு இரங்கலை தெரிவித்து ஆறுதலாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full