தற்போது பாவனி கையில் இருக்கும் முன்னாள் கணவரின் டாட்டூ - அமீர் சொன்ன உருக்கமான காரணம்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரியல் ஜோடியாக மாறி அமீர் மற்றும் பாவனி இருவரும் இந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்து இருக்கின்றனர். பவானிக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவருடன் ஒரு சீரியலில் நடித்த பிரதீப் என்ற நடிகருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் மகிழ்ச்சியாகி வாழ்ந்து வந்த இருவரது வாழ்க்கையிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. திருமணமாந 8 மாதத்தில் 2017 மே மாதம் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் கணவர் பிரதீப்.
கணவர் இறந்தாலும் இன்னமும் அவரது நினையாக கையில் குத்தி இருக்கும் டாட்டூவை நீக்காமல் இருக்கிறார் பாவனி. இப்படி ஒரு நிலையில் அமீர் - பாவனி இருவரும் பேட்டி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது பாவனியின் அந்த டாட்டூ குறித்து பேசிய அமீர் 'அவருடைய கணவர் இறந்த வலி இன்னமும் அவருக்கு இருக்கிறது கையில் இருக்கும் அவனின் ஹார்ட்வை கூட எடுக்கட்டுமா என்று இதுவரை என்னிடம் கேட்டது கிடையாது அதை எடுக்கும் எண்ணமும் அவருக்கு கிடையாது அந்த அளவிற்கு அவரை காதலித்திருக்கிறார்' என்று பேசி இருக்கிறார்.
ஏற்கனவே பிக் பாஸில் இருந்த போது போது தனது கணவர் குறித்து பேசிய பாவனி என் கணவரும் நானும் காதலித்து எங்கள் வீட்டில் தெரிவித்தோம். ஆனால், எங்கள் வீட்டில் சம்மதிக்காததால் நாங்கள் வீட்டை விட்டு வெளியில் வந்து நான்கு வருடங்கள் லிவிங் டு கெதர் முறையில் தனியாகத்தான் வாழ்ந்தோம். அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்குப் பின்னர் நான் ஆறு மாதம் கர்ப்பமாக இருந்தபோது எனக்கு அபார்ஷன் ஆகிவிட்டது.
https://www.youtube.com/watch?v=AVFgtqprJ4I
எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். ஆனால், அவர் எனக்கு கூடப்பிறந்த அண்ணன் கிடையாது. ஆனால், அவரைத்தான் நான் அண்ணனாக நினைத்துக் கொண்டேன். நான் என் கணவர் மற்றும் எங்கள் அண்ணா மூவரும் ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வந்தோம். ஒரு நாள் எங்கள் அண்ணன் பிறந்த நாளில் என்னுடைய கணவர் அதிகமாக குடித்து விட்டார். அப்போது அவர் சிகரெட் பிடித்தபோது நான் வேண்டாம் என்று தடுத்தேன். இதனால் அவர் என்னிடம் சண்டை போட்டுக் கொண்டு காரை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.
பின்னர் வீட்டிற்கு வந்த அவர் என்னிடம் சண்டை போட்டுக்கொண்டு தனியாக ஒரு அறையில் சென்று தாப்பாள் போட்டுக்கொண்டார். நானும் இப்போது பேசினால் சண்டை அதிகமாகும் என்று ஹாலில் படுத்து விட்டேன். என்னுடைய அண்ணா எங்கள் ரூமில் படுத்து விட்டா.ர் என்னுடைய கணவர் என் அண்ணன் தங்கும் அறையில் இருந்தார். அவர் அதிக குடிபோதையில் இருந்ததால் புடவையை எடுத்து ஹாலில் தூக்குப் போட்டு கொண்டார். ஆனால், உண்மையில் அவர் மிகவும் உயரமான ஆள், தூக்குப் போட்டுக் கொண்ட போது அவருடைய கால் கட்டிலில் தான் இருந்தது.
ஆனாலும் அவர் உடல் சாய்ந்தபடி அப்படியே புடவை இருக்கி இறந்துவிட்டார். பின்னர் அதிகாலை அவருக்கு ஷூட்டிங் இருக்கிறது என்று நான் அவர் அறையை தட்டினேன். ஆனால், அவர் திறக்காததால் பின்னர் கதவை வேகமாக தள்ளி பார்த்தபோது அவர் கட்டிலில் அப்படியே சாய்ந்தபடி தூக்கில் தூங்கி கொண்டு இருந்தார். நானும் என் அண்ணனும் அவரை பிடித்து இறக்கிய போது அந்தப் புடவையில் முடிச்சு கூட இல்லை. அவரை பார்த்ததும் ஏண்டா இப்படி பண்ண என்று கதறி அழுதேன். அவர் இறந்தபோது கூட எனக்கு அழுகை வரவில்லை கோபம் தான் வந்தது. எப்படி எல்லாம் வாழலாம் என்று நினைத்து இருந்தேன்' என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.