விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 81 நாட்களை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண்கள் தான் அதிகம் உள்ளனர். மேலும், நிகழ்ச்சியில் போட்டிகளும், சவால்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே செல்கிறது. இதனால் போட்டியாளர்களுக்குள் கலவரம் தொடங்கி இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 10 பேர் வெளியேறி இன்னும் 10 பேர் உள்ளே இருக்கின்றனர்.

இதில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக நுழைந்த அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் அடக்கம். இதில் சஞ்சீவ் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால், அமீர் ரசிகர்களுக்கு புதிய முகம் தான். இவர் வந்த ஒரு சில நாட்களில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் சரியான பேசுகிறார் என்ற கொஞ்சம் நல்ல பெயர் கிடைத்தது. ஆனால், கடந்த சில நாட்களாக இவரது பெயர் செம டேமேஜ் ஆகி இருக்கிறது.

Advertisement

அமீர் கடந்து வந்த பாதை :

ஆனால், நேற்றய நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதை டாஸ்கில் அமீர் பேசிய கதையை கேட்டு பலரும் கலங்கி இருப்பார்கள். அதுவும் அம்மாவின் உடலை அடக்கம் செய்ய கூட காசு இல்லாமல் வீட்டில் உள்ள டிவி சோபாவை விற்றேன் என்று அமீர் சொன்ன போது அனைவரின் நெஞ்சும் கலங்கியது. அமீரின் தந்தை இவர் 1வயது இருக்கும் போதே இறந்துவிட்டார், பின்னர் அமீர் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே இவரது அம்மா கொலை செய்யப்பட்டுவிட்டார்.

பெற்றோர்களின் இறப்பு :

ஆனால், அவர் கொலை செய்யப்பட்ட காரணத்தை மட்டும் வேண்டாம் என்று மறைத்து விட்டார். யாருடைய ஆதரவும் இன்றி தன்னுடைய வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற கவலையில் இருளாக இவரை சூழ்ந்து இருக்கிறது. இவருக்கு இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்பதே லட்சியம். இதனால் ஊட்டியில் ராணுவத்தில் சேரக்கூடிய படிப்பை படித்து இருக்கிறார். மேலும், இவரது கையில் 4 இன்ச் அளவில் ஒரு தேசிய கொடியின் டாட்டூ கூட இருக்கும்.

Advertisement

ஆலனா, சயீஷா :

ஆனால், சில பல காரணங்களால் இவரால் இன்னும் ராணுவத்தில் சேர முடியவில்லை. இதனால் தன் அம்மா ஆசைப்பட்டபடி ஒரு நடன பள்ளியை துவங்கி இருக்கிறார். அதில் முதல் மாணவிகளாக சேர்ந்தவர்கள் தான் ஆலனா, ஆயிஷா என்று கூறி இருந்த அமீர் அந்த குட்டி பெண்கள் தான் என் வாழ்க்கை மாற்றினார்கள் என்பதும் அவர்களின் அம்மா ஷைஜி மேம் தான் எனக்கு எல்லாமுமாக இருக்க போகிறார் என்று எனக்கு தெரியாது.

Advertisement

ஆதரவு கொடுத்த அஷ்ரப் – ஷைஜி :

அதன் பின்னர் அந்த குழந்தைகளின் அம்மாவான அஷ்ரப் – ஷைஜி என்பவர்கள் தான் என்னை அவர் வீட்டுக்கு அழைத்து சென்று தனக்கு சோறு போட்டு வளர்த்ததாக கூறியிருந்தார். மேலும், அவர்கள் வீட்டில் தான் முட்டை, கறி என்பதையே பார்த்தேன். மேலும், நான் கிறிஸ்டியனாக இருந்தேன். அவர்களுக்காக தான் நான் முஸ்லிமாக மாறினேன். நான் அவர்கள் வீட்டிள் இருப்பதால் அஷ்ரப் – ஷைஜி இருவரையும் அவர்களின் குடும்பத்தார் ஒதுக்கி வைத்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் என்னை அவர்கள் வெளியில் போ என்று சொன்னது இல்லை என்று கூறி இருந்தார்.

Advertisement