என்கிட்ட அவ்ளோ பணம் இல்ல, உதவி செய்ங்க - பாவனி காதலர் அமீர் வெளியிட்ட வீடியோ.
தயவு செய்து உதவுங்கள் என்று பிக்பாஸ் அமீர் வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அமீர். இவர் நடன இயக்குனர் ஆவார். இவரின் தந்தை இவர் 1வயது இருக்கும் போதே இறந்துவிட்டார், பின்னர் அமீர் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே இவரது அம்மா கொலை செய்யப்பட்டுவிட்டார்.
யாருடைய ஆதரவும் இன்றி தன் அம்மா ஆசைப்பட்டபடி ஒரு நடன பள்ளியை அமீர் நடித்தி இருக்கிறார். அதில் முதல் மாணவிகளாக சேர்ந்தவர்கள் தான் ஆலனா, ஆயிஷா. அந்த குட்டி பெண்கள் தான் அமீர் வாழ்க்கையை மாற்றினார்கள். அதன் பின்னர் அந்த குழந்தைகளின் அம்மாவான அஷ்ரப் – ஷைஜி என்பவர்கள் தான் அமீரை அவர்கள் வீட்டுக்கு அழைத்து சென்று பார்த்து இருக்கிறார்கள். பின் இவர் பல நிகழ்ச்சிகளுக்கு நடனம் சொல்லி இருந்தார்.
அமீர் குறித்த தகவல்:
இருந்தாலும் இவரை பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் நடிகை பாவனியை காதலித்தார். பாவனி இவருடைய காதலுக்கு நோ சொல்லிக் கொண்டு வந்தார். விடாது தன்னுடைய காதலை அமீர் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் நடனம் ஆடிருந்தார்கள்.
https://www.youtube.com/watch?v=GYfj6xJICiQ
அமீர் -பாவனி காதல்:
இந்த நிகழ்ச்சியில் இவர்களுடைய நெருக்கத்தை பார்த்து பலருமே இருவரும் காதலிக்க தொடங்கி விட்டார்கள் என்றெல்லாம் கூறியிருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் அமீரும் ஒவ்வொரு எபிசோடும் பாவனிக்கு தன்னுடைய காதலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். பின் ஒருவழியாக பாவனி தன்னுடைய காதலை கூறிவிட்டார். தற்போது இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இருவரும் சேர்ந்து விளம்பரம், ஆல்பம், படங்கள் என்று பிசியாக இருக்கிறார்கள்.
அமீர் -பாவனி கேரியர்:
அந்த வகையில் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த துணிவு படத்திலும் அமீர் -பாவனி சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள். அமீர் ஒரு படத்தை இயக்கிக் கொண்டும் வருகிறார். பல படங்களில் நடன இயக்குனராகவும் கமிட் ஆகியிருக்கிறார். இந்த நிலையில் பிக் பாஸ் அமீர் வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், நான் கடந்த சில வருடங்களாகவே இரண்டு மாணவர்களுடைய கல்வி செலவை ஏற்று செய்து வருகிறேன்.
அமீர் கேட்ட உதவி:
என்னால் முடிந்த அளவிற்கு உதவிகளை செய்தேன். பின் என்னால் முழுமையாக அவர்களுக்கு உதவி செய்ய முடியவில்லை. வேறு ஒருவர் மூலம் உதவிகள் செய்து வந்தேன். இப்போது அவர்களாலும் உதவி செய்ய முடியவில்லை. அந்த இரண்டு மாணவர்களுடைய கல்வி தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது. இரண்டு பேருமே நன்றாக படிக்கக் கூடியவர்கள். தயவு செய்து உதவுங்கள். அப்படி உதவு விரும்புவர்கள் என்னை அணுகலாம் என்று கூறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.