டான்ஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அலெனா, சயீஷா - அவரின் அம்மாவின் உருக்கமான பதிவு.

By Rajkumar · 4/1/2022

பிக் பாஸ் நிகழ்ச்சி 93 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் வரை 12 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, சஞ்சீவ், சிபி, அமீர், நிரூப் என்று 8 பேர் மட்டும்இருந்தனர். இதில் கடந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகி இருந்த நிலையில் பிக் பாஸில் மிகவும் எதிர்பார்கப்படும் Ticket To Finale டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த டாஸ்கில் வென்றால் நாமினேஷனில் இருந்து தப்பித்துவிடலாம் என்று ஒரு சிலரை தவிர மற்ற போட்டியாளர் மும்மரமாக போட்டியிட்டனர்.

அமீர் கடந்து வந்த பாதை :

இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். இதில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக நுழைந்த அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் அடக்கம். இதில் சஞ்சீவ் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால், அமீர் ரசிகர்களுக்கு புதிய முகம் தான். கடந்து வந்த பாதை டாஸ்கில் அமீர் பேசிய கதையை கேட்டு பலரும் கலங்கி இருப்பார்கள். அதுவும் அம்மாவின் உடலை அடக்கம் செய்ய கூட காசு இல்லாமல் வீட்டில் உள்ள டிவி சோபாவை விற்றேன் என்று அமீர் சொன்ன போது அனைவரின் நெஞ்சும் கலங்கியது.

தாய் தந்தையை இழந்த அமீர் :

அமீரின் தந்தை இவர் 1வயது இருக்கும் போதே இறந்துவிட்டார், பின்னர் அமீர் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே இவரது அம்மா கொலை செய்யப்பட்டுவிட்டார். ஆனால், அவர் கொலை செய்யப்பட்ட காரணத்தை மட்டும் வேண்டாம் என்று மறைத்து விட்டார். யாருடைய ஆதரவும் இன்றி தன்னுடைய வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற கவலையில் இருளாக இவரை சூழ்ந்து இருக்கிறது.

அமீருக்கு ஆதரவு தந்த குடும்பம் :

தன் அம்மா ஆசைப்பட்டபடி ஒரு நடன பள்ளியை துவங்கி இருக்கிறார். அதில் முதல் மாணவிகளாக சேர்ந்தவர்கள் தான் ஆலனா, ஆயிஷா என்று கூறி இருந்த அமீர் அந்த குட்டி பெண்கள் தான் என் வாழ்க்கை மாற்றினார்கள் என்பதும் அவர்களின் அம்மா ஷைஜி மேம் தான் எனக்கு எல்லாமுமாக இருக்க போகிறார் என்று எனக்கு தெரியாது. அதன் பின்னர் அந்த குழந்தைகளின் அம்மாவான அஷ்ரப் - ஷைஜி என்பவர்கள் தான் என்னை அவர் வீட்டுக்கு அழைத்து சென்று தனக்கு சோறு போட்டு வளர்த்ததாக கூறியிருந்தார்.

மேலும், அவர்கள் வீட்டில் தான் முட்டை, கறி என்பதையே பார்த்தேன். மேலும், நான் கிறிஸ்டியனாக இருந்தேன். அவர்களுக்காக தான் நான் முஸ்லிமாக மாறினேன். நான் அவர்கள் வீட்டிள் இருப்பதால் அஷ்ரப் - ஷைஜி இருவரையும் அவர்களின் குடும்பத்தார் ஒதுக்கி வைத்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் என்னை அவர்கள் வெளியில் போ என்று சொன்னது இல்லை என்று கூறி இருந்தார்.

எலிமினேட் ஆன அலெனா - ஆயிஷா :

இப்படி ஒரு நிலையில் அலெனா மற்றும் ஆயிஷா இருவரும் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'dance vs dance' நிகழ்ச்சியில் ஆடி வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். அந்த வீடியோவை பதிவிட்டுள்ள ஷைஜி, அலெனா, அழுது என்ன அமீர்கிட்ட மாட்டி விட்றாத ஏற்கனவே பீதியில இருக்கேன். வந்து என்ன சொல்லுவான்னு. உனக்கு தோல்வி புதிதான ஒன்று, ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், எனக்கும் ஐஷுவிற்கும் இதுதான் முதல் முறை, இதன் பின்னர் நான் கவனமாக வெற்றியை நோக்கி செல்வோம் என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full