நீ உண்மையாவே விஜய் ரசிகரா ? வீடியோவிற்கு ரசிகரின் கமன்ட்டால் கடுப்பான அபிராமி.

By Rajkumar · 10/3/2020

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபிராமி. பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் வரவேற்பை பெற்றது. இவர் பரதநாட்டியத்தில் மிகச் சிறந்த கலைஞர் என்றும் சொல்லலாம். இவருடைய அழகு, நடனம், முக பாவனை என அனைத்திலும் சிறந்த கலைஞராக இருந்த நடிகை அபிராமி இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து கொண்டார் என்று சொல்லலாம்.

https://twitter.com/Abhiramivenk/status/1236498097720578048

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய ஆடை, மதுமிதாவிற்கும் இவருக்கும் இடையே நடந்த கலாச்சாரம் பிரச்சனை, அபிராமி --கவின் காதல், முகென் காதல் என பிக்பாஸ் வீட்டில் எழுந்த இவரது பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதை எல்லாம் மறக்கும் வகையில் இவருடைய படம் அமைந்தது. கடந்த ஆண்டு வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளி வந்த படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை போனிகபூர் அவர்கள் தயாரித்து உள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அபிராமி சிறப்பான முறையில் நடித்து உள்ளார்.

இந்த படத்தின் மூலம் இவருக்கு மீண்டும் மக்கள் மத்தியில் பாராட்டு கிடைத்தது என்று சொல்லலாம். இப்படத்தில் இவருடைய கதாபாத்திரத்தை பாராட்டாதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவருடைய கதாபாத்திரத்தில் அழகாக நடித்து இருந்தார். தற்போது நடிகை அபிராமி புதிய அதிரடி ஆக்ஷனில் இறங்கி உள்ளார் என்று சொல்லலாம். அது வேற ஒன்றும் இல்லை நடிகை அபிராமி தற்போது இறுதி சுற்று ரித்திகா ஸ்டைலில் குத்து சண்டை பயிற்சயில் இறங்கியுள்ளார்.

சமீபத்தில் குத்து சண்டை பயிற்சயில் இருக்கும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் அபிராமி. இதனை கண்ட ரசிகர்கள் வியந்து போனார்கள். அதில் புகைப்படத்தை dpயாக வைத்த கணக்கில் இருந்து ரசிகர் ஒருவர், போடி பைத்தியம் என்று கேட்க, அதற்கு அபிராமியே, நீ உண்மையாவே விஜய் ரசிகரா? நீ ஒரு இழிவு. போய் அவர் எப்படி இருக்காருன்னு பாரு அப்புறம் அவருடைய ரசிகரா இரு. என்று கமன்ட் செய்துள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full