அவங்க உயிரோடு இருக்கும் போது அத செஞ்சிடுங்க - ரசிகர்களுக்கு அனிதா சம்பத் உருக்கமான வேண்டுகோள்.

By Arun · 16/1/2024

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமாகி பிரபலமான நடிகையாக இருப்பவர் அனிதா சம்பத். இவர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா. அதன் பின்னர் இவர் சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் போன்ற படத்திலும் நடித்திருந்தார். இதன் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

அதன் பின் அனிதா சம்பத் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். ஆனால், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை பெற்றார். இதனால் சீக்கிரமாகவே அனிதா நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு அனிதாவிற்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. தற்போது அனிதா நிறைய விளம்பரம், படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

அனிதா குறித்த தகவல்:

மேலும், இவர் தனியாகயூடுயூப் சேனல் ஒன்று ஆரம்பித்து தன் கணவருடன் சேர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கூட இவர் தங்களின் புது வீட்டின் கிரகப்பிரவேசம் செய்து இருந்த வீடியோவை பதிவிட்டு இருந்தார். பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் அனிதா கடந்த ஆண்டு தன்னுடையா தந்தையின் பிறந்தநாளுக்கு உருக்கமான போஸ்ட் ஒன்றை போட்டு இருந்தார். தற்போது அந்த பதிவை அவர் ரீபோஸ்ட் செய்து இருக்கிறார்.

அனிதா சம்பத் பதிவு:

அதில் அவர், அதே பதிவை ரீபோஸ்ட் செய்கிறேன். அதே பதிவை நான் மீண்டும் பதிவிடுவதற்கு காரணம் அதைவிட என்னுடைய மன ஓட்டத்தை மிக சரியாக என்னால் வேறு ஒரு பதிவு மூலம் எழுதி விட முடியாது. புகைப்படம் போட்டு வாழ்த்து சொல்ற அளவுக்கு மனசு இன்னும் திடப்படல. ஊருக்குப்போன இன்னும் நீ வரல, வந்துடுவே. இத தவிர வேற எதையும் சிந்திக்கல. எல்லா பிறந்தநாளுக்கும் பேனா வாங்கி தருவே. இந்த முறை பேனாவுக்கு கொடுத்து வைக்கல. ஹேப்பி பர்த்டே டாடி ! எத்தனை முறை விழுந்தாலும் மீண்டும் எழுந்து ஓடுவேன்! இந்த உலகம் என் பெயரை உச்சரிக்கும் வரை அனிதா சம்பத் என உன் பெயரையும் சேர்த்து தான் உச்சரிக்கும்.

தந்தை குறித்து சொன்னது:

உன் பெயரை நான் உள்ளவரை தாங்குவேன்! உலகத்தையே சுத்தி காட்டணும்னு நினைச்சு வந்தேன். இன்னும் அதை செய்ய முடியலை என்கிற ஃபீலிங்கோட தான் தினமும் வாழுறேன். இன்னும் போட்டோ போஸ்ட் பண்ணி விஷ் பண்ணவும், போட்டோவை எடுத்து பார்க்கவும் கூட மனசு திடப்படல. என்னைக்கும் அனிதா சம்பத் என உன் பெயரை என் பெயரோடு தாங்குவேன். ஹீரோவாக இருந்தாலும் அந்த ஹீரோக்களுக்கும் நாளுக்கு நாள் வயசு ஆகிக்கிட்டே போகும். முடிந்த அளவு இருக்கும்போதே நெனச்சதை எல்லாம் செஞ்சு கொண்டாடிடுங்க. இயர்லி ஹெல்த் செக்கப் எடுங்க. சின்னதா முடியலன்னு சொன்னாலும் லேட் பண்ணாம ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிடுங்க.

View this post on Instagram

A post shared by Anitha Sampath (@official_anithasampath)

அனிதா சொன்ன அறிவுரை:

செலவு பாக்காம ஹெல்த் இன்சூரன்ஸ் போட்டு வையுங்க. வெளியூர் கூட்டிட்டு போங்க! முடிஞ்சா கொஞ்சம் பணம் சேர்த்து வைத்து பிளைட்ல கூட்டிட்டு போங்க! அட்லீஸ்ட் இதெல்லாம் இருக்கும்போதே செஞ்சுட்டோம்னு மனச தேத்திக்கிற மரியாதையான விஷயங்களை பண்ணிடுங்க. நமக்காக நிறைய கனவு காணுறது அவங்கதான். ஆனால் நிறைய பேருக்கு நம்ம அந்த நிலையை அடையும்போது அவங்க பார்க்க இருக்க மாட்டாங்க. எனக்கும் அப்படித்தான் ஆயிடுச்சு. பேரெண்ட்ஸ் கூட இருக்குற ஆசிர்வாதம் கெடச்சவங்க அவங்கள நல்லா வெச்சுக்கோங்க என்று பதிவிட்டு இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full