என்னது, இந்த வாரம் அனிதா வெளியேறினாரா? அவரது கணவர் போட்ட பதிவால் ரசிகர்கள் ஷாக்.

By Rajkumar · 4/12/2020

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 61 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா ஆகியோர் வெளியேறிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்யுக்தா வெளியேறி இருந்தார். மற்ற போட்டியாளர்கள் வெளியேறியதைவிட சம்யுக்தாவின் வெளியேற்றம் தான் கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு முக்கிய காரணமே இவர் வெளியேறுவதற்கு முன்பாக இவருக்கு குறும்படம் போடப்பட்டு இருந்தது. அதே மற்ற போட்டியாளர்கள் வழி அனுப்பி வைக்கப்பட்ட விதத்தை விட சம்யுக்தாவை மற்ற போட்டியாளர்கள் வழியனுப்பி வைத்த விதம் மிகவும் நன்றாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

https://twitter.com/Lavi91367502/status/1334785944113704963

இந்த வார நாமினேஷன் அடிப்படையில் இந்த வாரம் ஆரி, சனம் ஷெட்டி, அனிதா, ஆஜித், சிவானி, ரம்யா, நிஷா ஆகிய 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் கண்டிப்பாக அஜித்,ஷிவானி, நிஷா, அனிதா ஆகிய 4 பேருக்கு கடும் போட்டிகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த வாரம் இரண்டு எலிமினேஷனாக கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த வாரம் ஷிவானி அல்லது நிஷா தான் வெளியேறுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வாரம் முழுதும் பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடைபெற்று வரும் ஓட்டிங்கில் அனிதாவிற்கு தான் குறைவான வாக்குகள் கிடைத்து வருகிறது.

இப்படி ஒரு நிலையில் அனிதா வெளியேறியதை சூசகமாக தெரிவிக்கும் விதமாக அவரின் கணவர் போட்டுள்ளதாக ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் அனிதா சம்பத்தின் கணவர் ஒரு கார்ட்டூன் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அதில் 'உன்னை காண காத்துகொண்டு இருக்க முடியவில்லை ' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை கண்ட பலரும் அனிதா வெளியேறி இருப்பதால் தான் இவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்று கூற ஆரம்பித்துவிட்டனர்.

https://twitter.com/SpeedPlayback/status/1334788457613291525

கடந்த வாரமே அனிதா நாமினேட் ஆகி இருந்தார். ஆனால், அவர் Nomination Topple Card- ஐ வென்று அவருக்கு பதிலாக சம்யுக்தாவை நாமினேட் செய்து விட்டார். ஒருவேளை இந்த Nomination Topple Card அறிமுகம் செய்யப்படாமல் இருந்திருந்தால் கடந்த வாரம் அனிதா வெளியேறி இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருந்திருக்கும்.இப்படி ஒரு நிலையில் தனது பதிவிற்கு விளக்கமளித்துள்ள அனிதாவின் கணவர் 'மக்கா, நான் அனிதாவ மிஸ் பன்றேன்னு மட்டும் தான் போட்டேன். எலிமினேஷனானு இப்போ தெரியாது. எனவே டென்சன் ஆகாதீங்க' என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full