அனிதா பேசிய சுமங்கலி பிரச்சனையை 10 வருடத்திற்க்கு முன்பே பேசியுள்ள கமல் - வைரலாகும் வீடியோ.

By Rajkumar · 1/11/2020

சினிமா உலகில் தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் உலக நாயகன் கமலஹாசன். நடிகர் கமலஹாசன் அவர்கள் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக அவதாரம் எடுத்து உள்ளார். கமலஹாசன் அவர்கள் இந்தியத் திரைப்பட நடிகர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பின்னனிப் பாடகர், நடன அமைப்பாளர் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர். இவர் சினிமா திரை உலகில் தன்னுடைய கடுமையான உழைப்பாலும், முயற்சியாலும் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறார்.

இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகளவில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதனால் தான் இவரை உலகநாயகன் என்று அழைக்கிறார்கள். இது அனைவருக்கும் தெரிந்தது தான். நடிகை கமல் சினிமாவையும் தாண்டி பகுத்தறிவாளர் என்பதும் அனைவருக்கும் தெரிந்தது தான். அதே போல கமல் ஒரு தொலைநோக்கு வாதி என்பதை பல முறை நிரூபித்து இருக்கிறார். கமல் பல ஆண்டுகளுக்கு முன்னர் சொன்ன பல கருத்துக்கள் தற்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனிதாவின் சுமங்கலி பிரச்சனை குறித்து கமல் பேசும் போது அனிதாவை பாராட்டி இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்க்கின் போது சுரேஷ் சக்ரவத்தி எதார்த்தமாக சுமங்கலி யாராவது வந்து விளக்கேட்ருங்கள் என்று கூறி இருந்தார்.

ஆனால், சிறிது நேரம் கழித்து பேசிய அனிதா, கணவர் இறந்துவிட்டால் வித்தியாசமாக பார்க்கும் பழக்கம் இன்னும் கிராமங்களில் ஒரு சில இடங்களில் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு ஒரு உதாரணமாக இன்றைக்கு நான் பார்த்தேன், சுரேஷ் சார் சுமங்கலி யாராவது இருக்கிறீர்களா என்று என்னை அழைத்தது சந்தோஷம். ஆனால், ஒருவேளை நான் அப்படி இல்லாமல் இருந்திருந்தால் ஒருவேளை கணவரை இழந்த பெண்கள் இருந்திருந்தால் அந்த உணர்வு எப்படி இருக்கும் என்று நான் யோசித்து பார்க்கிறேன்.

https://twitter.com/vijaytelevision/status/1322485949465423873

இது போன்ற விஷயங்களை கிராமங்களில் இன்னமும் பின்தொடர்ந்து வருவதை நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இப்போதும் எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் சுமங்கலி யாராவது இருக்கிறீர்கள் வந்து ஆரம்பித்து வையுங்கள் என்று தான் சொல்வார்கள். அது சென்னையில் மிகவும் கம்மியாக இருக்கிறது என்றுகூறிய அனிதா, தன்னுடைய திருமணத்தின் போது நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றியும் ஒரு இருந்தார். பின்னர் இறுதியில் சுமங்கலி, அமங்கலி என்றெல்லாம் கிடையாது, யார் ஆரம்பித்தாலும் ஒரு நிகழ்ச்சி நன்றாக தான் இருக்கும் என்று கூறி இருந்தார்.

https://twitter.com/LookingAhead1/status/1322597555633606662

ஆனால், அனிதா சொன்ன இந்த விஷயம் சுரேஷ் உட்பட பலரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது.ஒரு நல்ல நாளில் இப்படி எல்லாம் பேச வேண்டுமா என்று பலரும் வருத்தப்பட்டனர். அதே போல சுரேஷ் கூட, அந்த பெண் வேண்டுமென்றெ என் பெயரை கெடுக்க இப்படி பேசுகிறது. இது ஒரு மிகப்பெரிய கெட்ட பெயரை எனக்கு ஏற்படுத்திவிடும் என்று கூறி இருந்தார். மேலும், நிஷா, ரியோ, அர்ச்சனா என்று பலரும் அனிதா சொன்னது தவறு என்று அவருக்கு அறிவுறுத்தினர். பின்னர் தான் செய்தது தவறு என்று சுரேஷிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால், சுரேஷ் அவரின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் அனிதா சம்பத் பாத் ரூமில் கதவை சாத்திக்கொண்டு தேம்பி தேம்பி அழுதார். இப்படி ஒரு நிலையில் இந்த விஷயத்தில் நேற்று அனிதா சம்பத்திற்கு ஆதரவாக பேசி கைதட்டி பாராட்டி இருந்தார் கமல். ஆனால், இந்த அமங்கலி பிரச்சனை குறித்து நடிகர் கமல் 10 வருடத்திற்கு முன்பே பேசி இருக்கிறார் கமல். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full