இது மிகவும் கேவலமான செயல்? அனிதா சம்பத் போடா Travel Vlog வீடியோவால் கடுப்பாகும் இந்தியர்கள்.

By subhashini · 12/3/2024

அனிதா சம்பத்தை நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வரும் பதிவு தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் அனிதா சம்பத். தற்போது இவர் பிரபலமான நடிகையாக இருக்கிறார். இவர் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த சர்க்கார் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் போன்ற படத்திலும் நடித்திருந்தார்.

View this post on Instagram

A post shared by Anitha Sampath (@official_anithasampath)

இதன் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதன் பின் அனிதா சம்பத் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். ஆனால், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள்மத்தியில் வெறுப்பை பெற்றார். சம்பாதித்து வைத்த மொத்த பெயரையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனிதா கொடுத்து கொண்டார். அதோடு சீக்கிரமாகவே அனிதா நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார்.

அனிதா குறித்த தகவல்:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு அனிதாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. தற்போது அனிதா நிறைய விளம்பரம், படங்களில் நடித்து கொண்டு வருகிறார். மேலும், இவர் தனியாக யூடுயூப் சேனல் ஒன்று ஆரம்பித்து தன் கணவருடன் சேர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கூட இவர் தங்களின் புது வீட்டு கிரகப்பிரவேசம் செய்து இருந்த வீடியோவை பதிவிட்டு இருந்தார்.

https://www.youtube.com/watch?v=7SYgjpyorNA

அனிதா பதிவிட்ட வீடியோ:

இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அதோடு இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் தற்போது அனிதா அவர்கள் தன்னுடைய கணவருடன் சேர்ந்து மாலத்தீவிற்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் அவருடைய youtube சேனலில் வெளியிட்டு இருக்கிறார்.

மாலத்தீவு-இந்தியா ப்ரச்சனை:

ஏற்கனவே இந்திய அரசுடன் மாலத்தீவு அரசு பிரச்சனையில் இருக்கிறது. நாளுக்கு நாள் இந்தியா- மாலத்தீவு இடையேயான சர்ச்சை பெரிதாகி வருகிறது. மாலத்தீவில் வாழும் இந்தியர்களை வெளியேற்ற வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் கோஷமிட்டு வருகிறார்கள். அதோடு இந்திய ராணுவ வீரர்களை வெளியேற உதவி செய்து வருகிறார்கள். இதனால் மாலத்தீவுக்கு இந்திய மக்கள் சுற்றுலா பயணம் செல்வதை தவிர்த்து வருகின்றார்கள்.

நெட்டிசன்கள் விமர்சனம்:

இப்படி இருக்கும் நிலையில் நடிகை அனிதா சம்பத் தன்னுடைய கணவருடன் சேர்ந்து மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருப்பது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. நெட்டிசங்கள் பலருமே அனிதாவை திட்டியும் வேறு இடம் கிடைக்கவில்லையா? இது இந்தியாவை அவமதிக்கும் செயல் என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full