பக்கா பொறுக்கி மாதிரி இருக்கு - தன் வீடியோவில் கமண்ட் செய்தவருக்கு அனிதா சம்பத் கொடுத்த பதிலடி.

By Siva · 28/5/2023

தன்னை மோசமாக திட்டிய நபருக்கு அனிதா சம்பத் பதிலடி கொடுத்துள்ளார். சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பிரபலமான இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து. விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா சம்பத்.அதன் பின்னர் ஒரு சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார். மேலும் சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்திலும் நடித்திருந்தார் அனிதா சம்பத்.

இவருக்கென்று சமூகவலைதளத்தில் ரசிகர் பட்டாளமும் இருந்தது இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி இடம் இவருக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தார் அனிதா சம்பத். மேலும், இவர் பல்வேரு சர்ச்சைகளிலும் சிக்கினார். இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூட பங்கேற்று இருந்தார்.

பெயரை டேமேஜ் செய்துகொண்ட அனிதா :

கடந்த சீசனை விட இந்த சீசனில் தான் அனிதாவின் பெயர் பெரிதும் டேமேஜ் ஆனது. அதே போல வெளியேறுவதர்க்கு முன் அனிதா பிக் பாஸ் வீட்டின் கதவு அருகில் நின்றுகொண்டு நீண்ட நேரம் புலம்பிக்கொண்டிருந்தார். இந்த எலிமினேஷன் எப்படி என எனக்கு புரியல. நான் நன்றாக தான் விளையாடினேன், நான் வெளியேறத என்னாலே நம்ப முடியல என்ன காரணமாக இருக்கும் என்று புலம்பி கொண்டு இருந்தார்.

View this post on Instagram

A post shared by Anitha Sampath (@official_anithasampath)

பிக் பாஸுக்கு பின் அனிதா சொன்னது :

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனிதா. இந்த உலகத்தில் ஒரு பெண் சத்தமாக பேசவே முடியாது. இந்த உலகிற்கு எப்போதும் மென்மையாக சிரித்து பேசும் பெண்ணை தான் பிடிக்கும். நாம் இந்த நவீன உலகத்தில் இன்னும் பின்தங்கி தான் இருக்கிறோம். நாம் எப்போதும் பூ, மயில் நிலாவாக இருக்கலாமே தவிர புலி , சிங்கம், சூரியனாக இருக்க முடியாது என்று கூறி இருந்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை தனது கணவர் பற்றி பக்கம் பக்கமாக பேசி இருந்தார் அனிதா சமபத்.

பிஸியாக இருக்கும் அனிதா :

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சீரியல், சினிமா என்று படு பிசியாக இருந்து வருகிறார் அனிதா சம்பத். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் தொகுப்பாளனாகவும் இருந்து வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத் அடிக்கடி புகைப்படங்கள், வீடியோக்கள், ரீல்ஸ் போன்றவற்றை பதிவிடுவது வழக்கம்.

அசிங்கமாக பேசியவருக்கு பதிலடி :

அந்த வகையில் சமீபத்தில் இவர் ரீல்ஸ் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதற்கு இன்ஸ்டாவாசி ஒருவர் ' "பக்கா பொறுக்கி மாதிரி இருக்கு" என்று பதிவு வெளியிட்டு இருக்கிறார் அதற்கு நான்கு பேர் லைக் கொடுத்து இருக்கின்றனர். அதற்கு அனிதா சம்பத்," உன்னை யாரோ இப்படி சொல்லி இருப்பாங்க போல அதை இன்னொருத்தருக்கு சொல்லி ஆறுதல் பட்டிருக்கிற, உனக்கு லைக் போட்டவனும் எங்கேயோ செம்மையா அடி வாங்கி இருப்பான் போல என்று சிரிக்கிற இமேஜ் வைத்து கலாய்த்து வைத்திருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full